அமைச்சர்களுடன் சேர்த்து என்னையும் கைது செய்து பாருங்க... சிபிஐ அதிகாரிகளுடன் மமதா பானர்ஜி மோதல்!
நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமை
நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்களுடன் சேர்த்து தம்மையும் கைது செய்து பாருங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் மமதா பானர்ஜி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
போலி நிறுவனங்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்பட்டனர் என்பது வழக்கு. நாரதா என்ற இணையதளம் வெளியிட்ட வீடியோக்கள், படங்கள் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்மையில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கார் அனுமதி கொடுத்திருந்தார். இதனையடுத்து இன்று காலை அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
இதனையடுத்து கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் வழக்கறிஞர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் மமதா பானர்ஜியும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாநில அமைச்சர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிஐ அதிகாரிகளிடம் வாதிட்டார் மமதா பானர்ஜி.
அத்துடன் அமைச்சர்களுடன் சேர்த்து என்னையும் கைது செய்யுங்கள்.. என்னை கைது செய்யாவிட்டால் இந்த இடத்தைவிட்டு வெளியே செல்லப் போவது இல்லை என திட்டவட்டமாக மமதா கூறினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது தொடர்பாக வழக்கறிஞர் அனின்டோ ரவுத் கூறுகையில், சபாநாயகர் மற்றும் மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்களை அதிகாரிகளை கைது செய்ய முடியாது. அதனால் என்னையும் கைது செய்யுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் மமதா பானர்ஜி வாதிட்டார் என்றார்.
இதனிடையே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சபாநாயகர் என்ற முறையில் தமக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சபாநாயகரிடம் அனுமதியும் பெற வேண்டும். ஆனால் சிபிஐ அதிகாரிகள் என் அனுமதி பெறாமலேயே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளதாக மேற்கு வங்க சபாநாயகர் பிமன் பானர்ஜி சாடியுள்ளார். இதனிடையே நாரதா வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய பங்க்சால் நீதிமன்றத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications