For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெகனுக்கு ரூ.413 கோடி சொத்து இருக்கு… ஆனா சொந்த கார் இல்லையாமே?

By Mayura Akilan
|

ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு ரூ.413 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், ஆனால் சொந்த வாகனம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்தலா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக நேற்று முன்தினம் புலிவேந்தலா தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர் தனது சொத்து விவரத்தை வெளியிட்டார். அதில் தனக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ.341.79 கோடியும், மனைவி பாரதி பெயரில் ரூ.72.4 கோடியும் என மொத்தம் ரூ.413.83 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

YSR Congress president Jagan Mohan Reddy owns assets of over Rs. 343 crore

சொத்து மதிப்பு

இதில் சந்தூர் பவர் கம்பெனியில் ரூ.143.2 கோடியும், கர்மல் ஏசியா கம்பெனியில் ரூ.8 லட்சமும், பாரதி சிமென்ட் கம்பெனியில் ரூ.36.6 கோடி, சிலிக்கான் பில்டர்ஸ் கம்பெனியில் ரூ.2.91 கோடியும், கிளாசிக் ரியாலிட்டி கம்பெனியில் ரூ.74.33 கோடியும், சரஸ்வதி பவரில் ரூ.33.83 கோடியும், ஜெகதி பப்ளிக்கேஷன் கம்பெனியில் ரூ.4 கோடியும், ஆகாஷ் எஸ்டேட்டில் ரூ.10.24 கோடியும், பாரதி பேலசில் ரூ.12.30 கோடியும், லோட்டஸ் பாண்டு ஹவுசில் ரூ.5.30 கோடியும், சாக்சி டவரில் ரூ.29.67 கோடியும், கர்நாடகாவில் ரூ.12 கோடிக்கு சொத்தும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

குழப்பமா இருக்கே

ஆனால் இவர் வெளியிட்டுள்ள சொத்து விவரம் மிக குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகளும், சிபிஐ.யும் குழப்பத்தில் உள்ளது.

ரூ.6213.78 சொத்து மதிப்பு

இதுகுறித்து ஆந்திராவில் வெளியாகியுள்ள ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஜெகன்மோகன் ரெட்டி சந்தூர் பவர் கம்பெனியில் ரூ.143.2 கோடி என கூறிப்பிட்டுள்ளார். ஆனால் அதில் அவருக்கு ரூ.1332.34 கோடி சொத்து உள்ளது, கர்மல் ஏசியா கம்பெனியில் ரூ.8 லட்சம் என தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு ரூ.2.29 கோடியும், பாரதி சிமென்டில் ரூ.2710 கோடியும், சிலிக்கான் பில்டர்சில் ரூ.1006.80 கோடியும், கிளாஸ்சிக் ரியாலிட்டியில் ரூ.817.09 கோடியும், சரஸ்வதி பவனில் ரூ.320.02 கோடியும், ஜெகதி பப்ளிக்கேஷனில் ரூ.15 கோடியும், இம்மஷா இன்சரா கம்பெனியில் ரூ.10.24 கோடியும் என மொத்தம் ரூ.6213.78 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து முதலீடுகள்

மேலும், சந்தூர் பவர் கம்பெனியில் தனது பங்கு 10.2 சதவீதம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு 94.46 சதவீதம் அவருக்கு உள்ளது, இதேபோல் சரஸ்வதி, சிலிக்கான், கிளாஸ்சிக் ரியாலிட்டி ஆகிய கம்பெனிகளில் 64.66 சதவீதம் பங்கு உள்ளது. அதன்படி பார்த்தால் 673.19 கோடிக்கு அவருக்கு பங்கு உள்ளது. சந்தூர் கம்பெனியில் வெளிநாட்டு கம்பெனிகள் ஏசியன் இன்பராடெஸ்டர் மற்றும் புளுரி நெர்சிங் கம்பெனிகளும் முதலிட்டு செய்துள்ளன.

சிபிஐ சந்தேகம்

மேலும், சந்தூர் கம்பெனியில் நிம்மகட்டா பிரசாத் என்பவர் ரூ.30 கோடி கொடுத்து பங்கு பெற்றுள்ளார். ஆனால், பிரசாத்திடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்ற சந்தேகமும் சிபிஐக்கு வந்துள்ளது.

டிவி, பத்திரிக்கை

ஜெகன் மோகன் ரெட்டியின் கம்பெனிகளான சாக்ஷி பத்திரிக்கை, டிவி, பாரதி சிமென்ட், லோட்டஸ் பாண்டு பவர், பெங்களூரில் ராஜ்மஹால், வாணிஇச்சா பவன் மற்றும் அவரிடம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏராளமாக உள்ளன.

2004ல் சொத்து மதிப்பு

மேலும், அவர் 2004ம் ஆண்டு சட்டமன்ற தொகுதிக்கு பேட்டியிட்ட போது தனது சொத்தின் மதிப்பு ரூ.1.73 கோடியும், இதில் கடனாக ரூ.18.9 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்தார். 2009ம் ஆண்டு தேர்தலின் போது ரூ.57.8 கோடியும், கடன் ரூ.3.2 கோடியும், 2011ம் ஆண்டு இடைத்தேர்தலில் ரூ.388.33 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்,

10 ஆண்டுகளில் பல கோடி

தற்போது 2014ம் ஆண்டு ரூ.341.79 கோடி சொத்தும், கடன் ரூ.34.4 கோடி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் பினாமி பெயரிலும் ஏராளமான சொத்துகள், கம்பெனிகள் உள்ளதாக அந்த பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை கிளப்பும்

ஜெகன்மோகன் தெரிவித்துள்ள சொத்து விவரம் ஆந்திர அரசியலில் மீண்டும் புயலை கிளப்பி வருகிறது. அவர் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில் சிபிஐ.யினரும் விசாரணையில் இறங்கியுள்ளது

English summary
YSR Congress president YS Jagan Mohan Reddy owns assets of more than Rs. 343 crore but does not own a vehicle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X