For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்ட்டி அங்கிள் வேணாம்.. அத்தை மாமா நல்லாருக்கே.. உறவுகளைப் போற்றுவோம்!

Google Oneindia Tamil News

ஆன்ட்டி அங்கிள் வேணாம்.. அத்தை மாமா நல்லாருக்கே.. உறவுகளைப் போற்றுவோம்!

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல குடும்பத்தைப் போற்றும் விதமாக உலகம் முழுவதும் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

ஒருவர் எந்த ஒரு சூழலிலும் தன் குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்ட நாளாகும். பொருள் தேடலுக்காக வெளியே செல்லும் நாம் இறுதியில் நம் குடும்பத்தை நோக்கியே பயணிக்கிறோம்.

இன்றையச் சூழலில் அனைவரும் காலை முதல் இரவு வரை பம்பரமாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறோம். எதற்காக என்று கேட்டால் அனைவரின் பதிலும் என் குடும்பத்துக்காக என்ற ஒற்றை வார்த்தை தான் பதிலாக இருக்கும். அந்தக் குடும்பக் கட்டமைப்பைப் போற்றும் வகையில் மே ஆம் நாள் சர்வதேச குடும்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Specials: ரொம்ப மிஸ் பண்றோம்.. ரசிகர்களின் ஏக்கம் + பெருமிதம்.. லட்டு லட்டா கட்டுரைகள்.. இதை படிங்கSpecials: ரொம்ப மிஸ் பண்றோம்.. ரசிகர்களின் ஏக்கம் + பெருமிதம்.. லட்டு லட்டா கட்டுரைகள்.. இதை படிங்க

 சித்தி சித்தப்பா

சித்தி சித்தப்பா

கணவன் மனைவி குழந்தைகள் என்று சிறிய குடும்பங்கள் தான் இன்று பெரும்பாலான இடங்களில் இருப்பவை. தாத்தா பாட்டி அம்மா அப்பா சித்தப்பா சித்தி மாமா அத்தை அண்ணன் அக்கா தம்பி தங்கை என்று அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்வதில் மகிழ்ச்சி அதிகம். வேலை நிமித்தமாக ஊர் விட்டு ஊர் செல்லும் காலம் போய் நாடு விட்டு நாடு போகும் காலமாகி விட்டது. இதனால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.அதனால் குடும்ப தினம் அன்று நம் உறவுகளோடு நேரத்தைச் செலவழிப்போம்.

 குழந்தைகளுடன் நேரம்

குழந்தைகளுடன் நேரம்

வீட்டில் கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் போது அலுவலகம் முடிந்து வந்து அசதியில் உறங்கி விடுகின்றனர் வீட்டிலேயே இருந்தாலும் கணவன் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதும் மனைவி டி.வி பார்ப்பதும் குழந்தைகள் செல்போனில் விளையாடுவதுமாக இருக்கிறார்கள் அவ்வாறில்லாமல் குழந்தைகளோடு பேசி அவர்களோடு விளையாடி உங்கள் துணையோடு அன்பைப் பரிமாறிக் கொண்டு இனிமையாகப் பொழுதைக் கழியுங்கள்.

 அத்தை மாமா

அத்தை மாமா

உங்கள் குழந்தைகளுக்கு அங்கிள் ஆன்ட்டி என்று கற்றுக் கொடுக்காமல் அத்தை மாமா என்று உறவுமுறைச் சொல்லிக் கொடுங்கள். முடிந்தவரையில் உங்கள் குழந்தைகளுக்குக் குறைந்தது மூன்று தலைமுறையும் பங்காளிகள் யாரென்றும் கற்றுக் கொடுங்கள். விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு உங்கள் பிள்ளைகளையும் அழைத்துச் செல்லுங்கள். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

 உறவுகளுடன் கொண்டாடுவோம்

உறவுகளுடன் கொண்டாடுவோம்

வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள் கூட தீபாவளி பொங்கல் பான்ற பண்டிகை நாட்களில் தங்கள் உறவுகளோடு உறவாடச் சொந்த ஊருக்குச் சென்று விடுவர். அதன் சுகமே தனி தான். அதனால் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. இந்த சர்வதேச குடும்ப தினத்தில் அனைவரும் உடலால் ஒன்றுகூடாவிட்டாலும் இணையத்தின் வாயிலாகவோ தொலைபேசியின் வாயிலாகவோ ஒன்றுப்படுங்கள். இதனால் அனைவரும் மகி்ழ்வர். இதை முயற்சி செய்துத்தான் பாருங்களேன்.

English summary
International day for Families was celebrated all over the world yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X