38,000 ஜோடிகள் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள பச்சைக் கொடி காட்டிய சீன அரசு!
பெய்ஜிங்: மக்கள் தொகை உலகின் நம்பர் ஒன் நாடான சீனாவில் இந்த வருடம் 38,000 தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தைப் பெற அனுமதி வழங்கியுள்ளது சீன அரசு.
மக்கள் தொகையைக் குறைக்க, சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த சட்டமானது, கடந்த 2013 ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டது.

அதன்படி தகுதியுள்ள தம்பதிகள் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு அனுமதி வழங்கியது. இதன் படி பலர் 2வது குழந்தையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.
சீனாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த விதிமுறை தளர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும் ஒரு குழந்தை வைத்திருப்போர், 2வது குழந்தை பெற விரும்பினால் அதற்கு அரசிடம் முறையாக விண்ணப்பித்து அரசு அனுமதியுடன்தான் குழந்தை பெற வேண்டும்.
இந்த நிலையில் 14.5 லட்சம் தம்பதியினர் 2வது குழந்தை பெற விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த சீன அரசின் குடும்ப நலத்துறை அதிகாரிகள், அவரக்ளில் 38,000 பேருக்கு மட்டும் 2வது குழந்தை பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications