For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொத்தாக பலியான சீன மக்கள்.. முடியாத சோகம்.. கொரோனா கண்காணிப்பு முகாம் ஹோட்டல் சரிந்து 10 பேர் பலி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கி வந்த ஹோட்டல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

Recommended Video

    Corona virus : Affected toll nears 1 lakhs all over the world

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3097 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651-லிருந்து 80,696-ஆக அதிகரித்துள்ளது.

    இதை செய்யுங்கள் கொரோனா வைரஸ் உங்க கிட்டயே வராது.. உலக பிரபல மருத்துவரின் டிப்ஸ்! இதை செய்யுங்கள் கொரோனா வைரஸ் உங்க கிட்டயே வராது.. உலக பிரபல மருத்துவரின் டிப்ஸ்!

    ஹோட்டல்

    ஹோட்டல்

    இந்த நிலையில் சீனாவில் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 6 மாடிகள் கொண்ட ஹோட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கி வந்தது. கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஏராளமானோர் இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த ஹோட்டல் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது.

    மீட்பு பணி

    மீட்பு பணி

    ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் மீட்புக் குழுவினர் மாஸ்க் அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    முழுவீச்சில்

    முழுவீச்சில்

    இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மீட்பு குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஹோட்டல் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 80 அறைகள் உள்ளன. அந்த அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    10 பேர் பலி

    10 பேர் பலி

    சீனாவில் ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஹோட்டல் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Quarantine hotel in China collapses 70 and more trapped in debris. 10 bodies were recovered from the debris.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X