For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் - உடனே வந்த பிடன்

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பழமையான பாலம் மூன்று துண்டுகளாக உடைந்து விழுந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

Google Oneindia Tamil News

பிட்ஸ்பர்க்: அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் ஒன்று மூன்று துண்டுகளாக உடைந்து விழுந்து விபத்து நேரிட்டது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த வாகனங்கள் கவிழ்ந்து சிலர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பிட்ஸ்பர்க்குக்கு அதிபர் பிடன் செல்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க்கில் 50 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. அதிகாலை நேரத்தில் அப்பாலம் திடீரென 3 பாகமாக உடைந்து விழுந்தது. பாலம் உடையும் போது அதில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்தன.

10 injured Bridge in Pittsburgh collapses - Biden visit to talk infrastructure

இந்த விபத்தில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்தது. ஒரு பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கியது. எனினும் இவ்விபத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு வந்து அதிபர் ஜோ பிடன் பார்வையிட்டார். பாலம் உடைந்த விபத்தில் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதது மிகப்பெரிய அதிசயம் என்றும் பிடன் கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள பாலங்களின் உறுதித்தன்மை கண்டறியப்பட்டு சீரமைப்பு செய்யப்படும் என்றும் பிடன் தெரிவித்தார். இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
One of the oldest bridges in Pittsburgh , USA, crashed into three pieces. Vehicles traveling on the bridge overturned, injuring some. Fortunately no casualties were reported. The crash happened just hours before President Biden was due to leave for Pittsburgh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X