For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 மீ தூரத்தை 42.22 விநாடிகளில் கடந்து கின்னஸ் சாதனை படைத்த 105 வயது கில்லாடி தாத்தா

Google Oneindia Tamil News

கியோட்டோ: ஜப்பானில் 100மீ துாரத்தை 42.22 விநாடிகளில் கடந்து 105 வயது முதியவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே ஜப்பானில்தான் முதியவர்கள் அதிகம். குறிப்பாக 100 வயதைத் தாண்டியவர்கள் இங்கு ஏராளமாக உள்ளனர்.

105-Year-Old Man Sets World Record by Completing 100-Meter Sprint

இந்த நிலையில், அங்கு 105 வயதுடையவர்களுக்கான ஓட்டபந்தயப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதியவர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில், 100 மீ துாரத்தை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானை சேர்ந்த ஹிடோகிசி மியாஸாகி (105) புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

முன்னதாக தனது 100வது வயதில் நடந்த ஓட்டப்போட்டியில், 100மீ., துாரத்தை 29.83 விநாடிகளில் கடந்த இவரது சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இந்தப் புதிய சாதனை குறித்து அவர் கூறுகையில், "கூடுதல் பயிற்சி செய்து, 'மின்னல் மனிதன்' உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே தனது லட்சியம்" என்கிறார்.

அப்படிப் போடு தாத்தா!

English summary
A 105-year-old Japanese man was recognized as the world’s oldest competitive sprinter on Wednesday after completing a 100-meter race in Kyoto in 42.22 seconds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X