'திடீர் வெடிச்சத்தம்..' பாகிஸ்தானில் அதிபயங்கர வெடிவிபத்து.. 15 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் ஏற்பட்ட அதிபயங்கர வெடி விபத்தில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட அதிபயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
கராச்சி நகரின் ஷேர்சா பகுதியில் ஏற்பட்ட இந்த மோசமான வெடி விபத்து காரணமாக, அங்கிருந்த வங்கிக் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கட்டிட இடுபாடிகளில் பலரும் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இது குறித்த விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், எரிவாயு பைப்லைன் வெடித்ததில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய இன்னும் சில நாட்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த எம்பி ஆலம்கிர் கானின் தந்தை திலாவர் கானும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமரின் அரசியல் தொடர்பு சிறப்பு உதவியாளர் ஷாபாஸ் கில் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications