For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி நீங்க வரவேண்டாம்.. நாங்க இருக்கோம்.. வருகிறது மரம் நடும் ரோபோட்.. மாஸ் காட்டும் ட்ரீ ரோவர்

அமெரிக்காவில் மரம் நடுவதற்காக ''ட்ரீ ரோவர்'' என்ற ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் மரம் நடுவதற்காக ''ட்ரீ ரோவர்'' என்ற ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நிக் பிரிட்ச், டெய்லர் ரோட்ஸ் ஆகிய மாணவர்கள் இந்த ரோபோட்டை கண்டுபிடித்துள்ளனர்.

4 மாத உழைப்பின் மூலம் இந்த ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை வைத்து இவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர். இதன் மூலம் மிகவும் எளிதாக மரங்களை நடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு முன்பு

மூன்று வருடங்களுக்கு முன்பு

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு நிக் பிரிட்ச், டெய்லர் ரோட்ஸ் இந்த ரோபோட் குறித்த தகவலை வெளியிட்டார்கள். 2015லேயே இதனுடைய சிறிய மாடலை வெளியிட்டு சோதனை செய்து பார்த்தார்கள். அதை வெறும் நான்கு மாதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது அதன் இறுதி மாடல் வெளியாகி இருக்கிறது. இது விற்பனைக்கும் வந்துள்ளது.

எப்படி செயல்படுகிறது ரோபோட்

எப்படி செயல்படுகிறது ரோபோட்

இந்த ரோபோட், தமிழ்நாட்டில் இருக்கும் நாற்று நடும் எந்திரம் போலவே செயல்படும். ஆனால் என்ன மாதிரியான மண்ணிலும் இது செடியை நட முடியும். இதில் இருக்கும் வலுவான இரும்பு ஆயுதங்கள், மூலம் குழி தோண்டி எளிதாக அதில் செடியை நடமுடியும். இதைப்பற்றிய சோதனை வீடியோ சில வருடங்களுக்கு முன்பே இணையத்தில் வெளியானது.

ரெடிமேட் செடி

ரெடிமேட் செடி

இதற்காக அந்த ரோபோட்டில் செடி வைக்கும் பெட்டி ஒன்றுள்ளது. வரிசையாக அதில் இருக்கும் செடிகளை இந்த ரோபோட் நடும். இதற்காக இவர்கள் இருவரும் ரெடிமேட் செடிகளை உருவாக்க, தனியாக தோட்டம் ஒன்றும் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் இந்த செடிகளையும் விற்பனை செய்வார்கள் என்று கூறியுள்ளனர்.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பம்

3டி பிரிண்டிங் தொழில்நுட்பம்

இதற்கான விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆச்சர்யம் என்னவென்றால் இதில் இருக்கும் 90 சதவிகித பாகங்கள் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. இரும்பு பொருட்களை தவிர எல்லாமே இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கபட்டது. இதனால் இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
2 college students create Tree planting robot in America. They have named the robot as TreeRover, and also released video in youtube.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X