For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகம் முழுவதும் 23.2 கோடி மக்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள் - ஐ.நா

Google Oneindia Tamil News

ஐ.நா: உலகம் முழுவதும் 23.2 கோடி மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருவதாக ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது.

இதில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இடம் பெயர்வோரின் மிகுந்த விருப்பத்துக்குரிய நாடாக அமெரிக்காதான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறதாம்.

உலக மக்கள் தொகையில் 3.2 சதவீதம்

உலக மக்கள் தொகையில் 3.2 சதவீதம்

உலக மக்கள் தொகையில் 3.2 சதவீதம் பேர் அதாவது 23.2 கோடி பேர் சொந்த நாடுகளை விட்டு இடம் பெயர்ந்து வாழ்வதாக ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறையின் அறிக்கை சொல்கிறது.

கிடுகிடு உயர்வு

கிடுகிடு உயர்வு

கடந்த 1990ம் ஆண்டு இது 15.4 கோடிப் பேராக இருந்தது. 2000மாவது ஆண்டில் 17.5 கோடி பேராக இந்த எண்ணிக்கை இருந்தது.

பிரித்து கொடுக்கப்பட்ட அறிக்கை

பிரித்து கொடுக்கப்பட்ட அறிக்கை

தற்போதைய அறிக்கையில், நாடு வாரியாக, பிறப்பு வாரியாக, பாலின வாரியாக, வயது வாரியாக பிரித்து வகைப்படுத்தியுள்ளது ஐ.நா.

வளர்ந்த நாடுகளில்தான் அதிகம் பேர்

வளர்ந்த நாடுகளில்தான் அதிகம் பேர்

வளர்ந்த நாடுகளில்தான் அதிக அளவிலான இடப் பெயர்ச்சி அடைந்த மக்கள் வசிக்கின்றனராம்.

வளர்ந்த நாடுகளில் 13.6 கோடிப் பேர்

வளர்ந்த நாடுகளில் 13.6 கோடிப் பேர்

வளர்ந்த நாடுகளில் மட்டும் 13.6 கோடி இடம் பெயர்ந்த மக்ள் வசிக்கின்றனர்.

வளரும் நாடுகளில் குறைவு

வளரும் நாடுகளில் குறைவு

வளரும் நாடுகளில் 9.6 கோடிப் பேர் வசிக்கின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

முறைப்படுத்தினால் நல்லது

முறைப்படுத்தினால் நல்லது

இடம் பெயர்ந்து வரும் மக்கள் தொகையை உரிய முறையில் முறைப்படுத்தினால், சரியாக நிர்வகித்தால், சமூக பொருளாதார மாற்றங்கள் மிகவும் அபரிமிதமாக இருக்கும். இது அவர்களின் சொந்த நாடுகளுக்கும், அவர்கள் அடைக்கலம் புகும் நாடுகளுக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்கிறார் ஐ.நா. இணைச் செயலாளர் வூ ஹோங் போ.

English summary
With more people than ever living abroad, Asia sees the largest increase of international migrants in the past decade, and the US remains the most popular destination, a UN report has revealed. New figures from the UN Department of Economic and Social Affairs (UN-DESA) showed that 232 million people, or 3.2 percent of the world's population, live abroad worldwide, compared with 175 million in 2000 and 154 million in 1990, reported Xinhua citing the report released Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X