லூசியானாவில் மர்மநபர் துப்பாக்கி சூடு: 3 போலீசார் பலி- ஒபாமா கண்டனம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூன்று போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லூசியானா மாகாணத்தில் பேட்டன் ரோஜ் பகுதியில் நிகழந்த இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய மர்ம நபர், கருப்பு உடை அணிந்திருந்ததாகவும், முகத்தை மூடியிருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேக்கிக்கபடும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்றும் ஷெரீப் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போலீசார் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுக்கான பின்னணி காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என்பதில் நம் தேசம் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கக் வேண்டும் என்றார்.
மேலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வார்த்தைகள், செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் ஒபமா வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் போலீசார் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதன்முதலில் வீட்டு உபயோக கடையில் பணிபுரியும் கறுப்பினத்தவரை வெள்ளை நிறப் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அடுத்த சில நாட்களில் மற்றொரு கறுப்பினத்தவர் ஒருவரை வெள்ளை நிறப் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வீடியோவும் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் தோழியால் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், அந்நாட்டின் டலாஸ் பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவர் போலீசார் 5 பேரை சரமாரியாக சுட்டுக் கொன்றார். அதன் தொடர்ச்சியாக இந்த நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications