பாகிஸ்தானில் இந்து கோவிலில் திருட்டு.. அனுமர் சிலை, சூலாயுதத்தை இரும்பு கடையில் விற்ற 4 பேர் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பிரபல இந்து கோவிலில் அனுமார் சிலை, சூலாயுதம் உள்பட விலையுயர்ந்த பொருட்களை திருடி விற்ற 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இந்துக்கள் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்தினர் இந்துக்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானின் தேசிய தரவுகள் அறிக்கையின் படி, பாகிஸ்தானில் வசிக்கும் பதிவு செய்து கொண்ட இந்துக்களின் எண்ணிக்கை 22 லட்சத்திற்கும் மேல் உள்ளது.

பாகிஸ்தானில் இந்து கோவில்கள்
குறிப்பாக பாகிஸ்தானில் இசுலாமிய சமயத்திற்கு அடுத்த பெரிய சமயமாக இந்து சமூகம் உள்ளது. அங்கு வசிக்கும் இந்து மக்களுக்கு பல இடங்களில் கோவில்களும் உள்ளது. அங்கு தங்கள் இஷ்ட தெய்வங்களை பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். எனினும் பாகிஸ்தானில் உள்ள இத்தகைய இந்துக் கோவில்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டாலும் இத்தகைய சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

8 சிலைகள் காணவில்லை
இந்துக்கோவில்களை சேதப்படுத்து, சுவற்றில் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வாசகங்கள் என அடிக்கடி சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் பிரபல இந்து கோவில் ஒன்று உள்ளது. அங்குள்ள இந்து சமூக மக்களின் வழிபாட்டு தலமாக இந்த கோவில் உள்ளது. இந்த நிலையில், அந்த கோவில் உள்ள அனுமன் சிலைகள், தாலிக்கொடிகள், சூலாயுதம் மற்றும் பிரார்த்தனை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது. அனுமன் சிலை உள்பட மொத்தம் 8 சிலைகள் காணாமல் போனதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தேடுதலில் போலீசார்
இது குறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் கோவிலில் திருடிச்சென்ற நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கராச்சியின் லியாரி பகுதியில் ஒரு கும்பலினர் கோவில் பொருட்களை ஒரு பழைய சாமான்கள் கடையில் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த கடையில் சென்று சோதனை நடத்தினர். இதில் அங்கு கிடைத்த பொருட்கள் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து கோவில் பொருட்களை வாங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 பேர் கைது
சைபுதீன் மற்றும் ஜகாரியா அன்வர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கோவில் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 4 பேர் தான் கோவிலில் உள்ள அனுமன் சிலை, சூலாயுதம் உள்ளிட்ட பொருட்களை திருடி விற்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications