5 லட்சம் பேரை வெளியேற்றும் அமெரிக்கா.. டிரம்புக்கு பச்சை கொடி.. எந்த நாட்டினருக்கு அதிக பாதிப்பு?
நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை டொனால்ட் டிரம்ப் வெளியேற்றி வருகிறார். மேலும் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது 5 லட்சம் பேரை அமெரிக்காவில் இருந்து டிரம்ப் வெளியேற்ற பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுவேன். அமெரிக்கர்களுக்கு வேலையை உறுதி செய்வேன் என்று கூறினார்.

அதன்படி டிரம்ப் பதவியேற்றதுமே அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்த பல்வேறு நாட்டு மக்களை நாடு கடத்தினார். இதில் நம் நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர். அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் கை, கால்களில் சங்கிலிப்போட்டு அவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது அமெரிக்காவில் வசிக்கும் 5 லட்சம் அகதிகளை டிரம்ப் நாடு கடத்த உள்ளார். அமெரிக்காவை எடுத்து கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் அகதிகளாக ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இவர்கள் 2 ஆண்டு வரை அங்கி தங்கியிருந்து பணியாற்ற முடியும்.
அமெரிக்காவில் பரோல் புரோகிராம் என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டம் என்பது வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருவோருக்கு இடம் அளிக்கும் திட்டமாகும். இந்த திட்டம் மாதம் 30 ஆயிரம் பேர் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கிறது. இவர்கள் 2 ஆண்டு வரை தங்கியிருந்து பணியாற்ற முடியும். அதன்பிறகு நாடு திரும்ப வேண்டும்.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது . இதனை குறைக்க வேண்டும் என்பதற்காக முந்தைய அதிபர் ஜோ பைடன் பரோல் திட்டத்தை தொடங்கினார். கியூபா, ஹைட்டி, நிகரகுவா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தான் இப்படி அதிகமாக அமெரிக்காவில் உள்ளனர்.
இதனால் அந்த 4 நாடுகளை சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவிட்டது. இதனால் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் வரை நாடு கடத்தப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்பிற்கு மரண அடி கொடுத்த நீதிமன்றம்.. H-1B விசா கட்டண உயர்வு ரத்து.. இந்தியர்களுக்கு மிக வெற்றி -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications