For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிலிப்பைன்ஸ்சில் நிலநடுக்கம்... 6.1 ரிக்டெர் ஆக பதிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்சின் தெற்கு மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

பிற்பகல் 2.43 மணியளவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடமேற்குபகுதியில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சான்டா மோனிகா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறினர்.

6.1-magnitude earthquake strikes off Philippines

பிற்பகல் நேரம் என்பதால் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள் போட்டது போட்டபடியே அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உயிரிழப்புகள் பற்றியும் தகவல்கள் தெரியவரவில்லை என அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A 6.1-magnitude earthquake hit 22km northwest of Santa Monica in the Philippine province of Surigao del Norte on Friday at 2.43pm local time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X