For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்வாக்கு நிறைந்த பெண்கள் பட்டியலில் 8 இந்தியர்கள்- 2வது இடத்தில் சந்தா கோச்சார்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆசியாவின் செல்வாக்கு நிறைந்த பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 8 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் இரண்டாம் இடத்தினை சந்தா கோச்சார் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் டைம் பத்திரிகை நடத்தும் பார்ச்சூன் வர்த்தகம் மற்றும் தொழில் தொடர்பான பத்திரிகை ஆசியா - பசிபிக் பகுதியில் அதிக செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 25 பேர் இந்தப் பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளனர்.

8 Indians led by Chanda Kochhar in Fortune's list of powerful Asia-Pacific women

8 இந்தியப் பெண்கள்:

இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பெண்கள் இடம்பெற்று உள்ளனர்.

சந்தா கோச்சாருக்கு 2வது இடம்:

தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ யின் தலைவர் சந்தா கோச்சர் பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.

அருந்ததிக்கு 4வது இடம்:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பட்டியலில் 4 ஆவது இடம் பிடித்துள்ளார்.

எச்.சி.எல் நிஷிக்கு 5ம் இடம்:

எண்ணெய் நிறுவனமான எச்.பி.சி.எல் இயக்குனர் நிஷி வாசுதேவா பட்டியலில் 5ஆம் இடம் பிடித்துள்ளார்.

ஆக்சிஸ் வங்கியின் ஷிகாவுக்கு 10வது இடம்:

ஆக்சிஸ் வங்கியின் ஷிகா சர்மா பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கிரண் மஜூம்தார் 19வது இடத்தில்:

உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து நிறுவனம் பயோகான் தலைவர் கிரண் மஜூம்தார் பட்டியலில் 19ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 22வது இடம்:

தேசிய பங்குச்சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா 22 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

நைனா லால் 23வது இடத்தில்:

எச்.எஸ்.பி.சியின் நைனா லால் 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழகத்தின் மல்லிகாவுக்கு 25வது இடம்:

தமிழகத்தைச் சேர்ந்த "டாபே" டிராக்டர் நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் 25 ஆவது இடத்தினைப் பிடித்துள்ளார்.

English summary
As many as eight Indian women, led by ICICI bank chief Chanda Kochhar, have made it to the Fortune list of 25 most powerful women "shaping the new world order" in the Asia-Pacific region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X