
ஒரேநேரத்தில் 8 மாடல் அழகிகள் பலாத்காரம்.. நிர்வாணப்படுத்தப்பட்ட ஆண்கள்..தென்ஆப்பிரிக்காவில் கொடூரம்
ஜோகனஸ்பர்க்: தென்ஆப்பிரிக்காவில் மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங்கின்போது 8 மாடல் அழகிகளை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த ஒரு கும்பல், ஆண்களையும் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் அருகே குருகெர்ஸ்ட்ராப் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் ஏராளமான சூட்டிங்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கு மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங் நடைபெற்றது வருகிறது.
இந்த சூட்டிங்கில் 8 மாடல் அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் ஆவார்கள். மேலும் சூட்டிங் தொடர்பான பணியில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தனியார் பள்ளியை சூறையாடிய மேலும் 4 பேர் கைது...15 நாட்கள் சிறை

துப்பாக்கி முனையில் மாடல் அழகிகள் பலாத்காரம்
இந்நிலையில் மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங் வழக்கம்போல் நடைபெற்று வந்தது. அப்போது துப்பாக்கி ஏந்தி ஒரு கும்பல் திபுதிபுவென நுழைந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களிடம் துப்பாக்கிகளை காண்பித்து அச்சுறுத்திய கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் துப்பாக்கி காட்டி மிரட்டி மாடல் அழகிகளிடம் அத்துமீறினர். துப்பாக்கியை காட்டி மிரட்டில் கும்பல் மாடல் அழகிகளை பலவந்தமாக கூட்டு பலாத்காரம் செய்தனர். தங்களை விட்டுவிடும்படி மாடல் அழகிகள் கெஞ்சியும் அந்த கும்பல் அவர்களை விடவில்லை.

நிர்வாணப்படுத்தப்பட்ட ஆண்கள்
மேலும் அங்கிருந்த ஆண்களையும் அந்த கும்பல் தாக்கியது. ஆண்களின் உடைகளை அகற்றக்கோரி நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கினர். அதோடு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த உபகரணங்களையும் அவர்கள் அடித்து உடைத்ததோடு அவர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள் என அனைத்தையும் பறித்து கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகினர். இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் தலையீடு
இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நேரடியாக களமிறங்கி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா, ‛‛குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்'' என உள்துறை அமைச்சருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கனிமசுரங்க கொள்ளை கும்பல்
இதற்கிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் படி குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், தென்னாப்பிரிக்காவின் கனிம சுரங்கங்களில் கொள்ளையடிக்க வந்த நிலையில் சூட்டிங் நடத்திய நபர்களை மிரட்டி தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அந்த கும்பல் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? தற்போது எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் 67 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.