எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி.. ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்கள் வந்த படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். இப்படி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்களும் நின்றபாடில்லை.

எல்லை தாண்டியதாக கூறி மீனவர்களை கைது செய்வது மட்டும் இன்றி அவர்களது படகுகளை பறிமுதல் செய்து, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்தி பல்வேறு அட்டூழிய செயல்களிலும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
எனினும் இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான், இன்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். மீன்பிடித்துவிட்டு இன்று அதிகாலை கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வர மீனவர்களை கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்கள் வந்த படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications