For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வேக்சின்.. 9 புதிய பில்லியனர்களை உருவாக்கிய தடுப்பூசி.. பிரச்சார குழு தகவல்

Google Oneindia Tamil News

பாரிஸ் (பிரான்ஸ்): கொரோனா தடுப்பூசிகள் புதிதாக ஒன்பது பேரை மிகப்பெரிய பில்லியனர்களாக மாற்ற உதவியுள்ளது என்று மக்கள் தடுப்பூசி கூட்டணி தெரிவித்துள்ளது, தடுப்பூசி தொழில்நுட்பத்தில் மருந்து நிறுவனங்களின் "ஏகபோக கட்டுப்பாட்டை" நிறுத்த வேண்டும் என்றும் வேக்சின் மூலம் சம்பாதித்த பணத்தில் ஏழை நாடுகளில் உள்ள அனைவருக்கும் 1.3 முறை தடுப்பூசி போட முடியும் என்றும் அந்த பிரச்சார குழு கூறியுள்ளது

கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசி, இந்தியாவில கோவிஷீல்டு, கோவேக்சின், ரஷ்யாவில் ஸ்பூட்னிக் வி, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, சீனாவில் சின்போர்ம் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

நல்லாட்சிக்கான முதல்படி.. தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பாராட்டுக்கள்.. ஜக்கி வாசுதேவ் டிவிட்! நல்லாட்சிக்கான முதல்படி.. தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பாராட்டுக்கள்.. ஜக்கி வாசுதேவ் டிவிட்!

இப்படி உலகின் பல்வேறு நாடுகளின் மருந்து நிறுவனங்களும் தடுப்பூசியை கண்டுபிடித்து அதை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகம் செய்கின்றன. இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர் புதிய பில்லியனர்களாக மாறி உள்ளனர்.

1.41லட்சம் கோடி

1.41லட்சம் கோடி

சொத்துக்கள் மற்றும் தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் அடங்கிய மக்கள் தடுப்பூசி கூட்டணி இது பற்றி கூறுகையில் "மருந்து தயாரிப்பவர்கள் ஒன்பது பேர் புதிய பில்லியனர்களாக மாறி உள்ளனர். அவர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 19.3 பில்லியன் டாலர் (ரூ.14,11,68,01,65,000 ). இந்திய மதிப்பில் 1லட்சத்து 41 ஆயிரத்து 168 கோடியாகும்.

ஏழை நாடுகள்

ஏழை நாடுகள்

இவர்கள் வேக்சின் மூலம் சம்பாதித்த பணத்தில் ஏழை நாடுகளில் உள்ள அனைவருக்கும் 1.3 முறை தடுப்பூசி போட முடியும். இந்த புள்ளிவிவரங்கள் ஃபோர்ப்ஸ் பணக்கார பட்டியல் தரவை அடிப்படையாகக் கொண்டவை இந்த பில்லியனர்கள் இந்த தடுப்பூசிகளில் வைத்திருக்கும் ஏகபோகத்தினால்(அறிவுசார் சொத்துரிமை) பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

மாடர்னா தடுப்பூசி

மாடர்னா தடுப்பூசி

9 புதிய மெகா பணக்காரர்களைத் தவிர, தடுப்பூசி காரணமாக தற்போதுள்ள எட்டு கோடீஸ்வரர்கள் தங்களது மொத்த செல்வத்தை 32.2 பில்லியன் டாலர் ஆக உயர்த்தி உள்ளார்கள். புதிய தடுப்பூசி பில்லியனர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலின் . அடுத்ததாக பயோஎன்டெக்கின் உகுர் ஷாகின். சீனாவின் கேன்சினோ பயோலாஜிஸ் நிறுவனங்கள் அடுத்த 3 இடத்தில் உள்ளனர்.

ரத்து செய்ய வேண்டும்

ரத்து செய்ய வேண்டும்

கோவிட் -19 தடுப்பூசிகளின் அறிவுசார் சொத்துப் பாதுகாப்புகளை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஜி 20 உலகளாவிய சுகாதார உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த தடுப்பூசி பணக்காரர்களின் ஆய்வு பட்டியல் வெளிவந்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசிகளின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புகளை தற்காலிகமாக ரத்து செய்தால், வளரும் நாடுகளில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும். ஏற்றத்தாழ்வுகளும் சமநிலைக்கு வரும் என்று பிரச்சார குழு தெரிவித்துள்ளது.

English summary
Profits from Covid-19 jabs have helped at least nine people become billionaires, a campaign group said Thursday, calling for an end to pharmaceutical corporations' "monopoly control" on vaccine technology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X