இனவெறி எதிர்ப்பு போராளி ஜேக்கப் ஜூமா வீழ்ந்தது இப்படித்தானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இனவெறி எதிர்ப்பு போராளி ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியில் இருந்து விளகினார் | Oneindia Tamil

  கேப்டவுன்: இனவெறியை எதிர்த்துப் போராடிய நெல்சன் மண்டேலாவுடன் ராபன் தீவு சிறையில் அடைபட்டு கிடந்தவர் தற்போது அதிபர் பதவியில் இருந்து விலகி இருக்கும் ஜேக்கப் ஜூமா. சிறந்த அரசியல்வாதியாக இருந்தவர் ஊழல் கரையை சுமந்து கொண்டு சொந்தக் கட்சியினராலேயே அதிபர் பதவியை விட்டு விலக நேரிட்டுள்ளது.

  அதிபர் ஜேக்கப் ஜூமா மக்களின் தலைவராகவே தொடக்க காலங்களில் போற்றப்பட்டார், குறிப்பாக ஏழைகளின் நண்பனாக கருதப்பட்டவர். கறுப்பர்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறி ஆட்சியின் கீழ் வறுமையில் வளர்ந்த ஜூமா முறையான கல்வி இல்லாத, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார்.

  இளம் வயதிலேயே ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் இனவெறிக்கு எதிராக எதிர்த்து போராடிய நெல்சன் மண்டேலாவுடன் ராபென் தீவு சிறையில் அடைபட்டிருந்தார். ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புலனாய்வுப் பிரிவு தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

  துணை அதிபராக செயல்பட்டவர்

  துணை அதிபராக செயல்பட்டவர்

  தனது நெருங்கிய நண்பர் தாபோ உம்பெக்கி அதிபராக இருந்தபோது துணை அதிபராக ஜூமா பணியாற்றினார். இருவருக்குள்ளும் பிரச்சனை உருவான நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் உம்பெக்கி அவரை பதவி நீக்கம் செய்தார்.

  வெற்றிகளை மட்டுமே சுவைத்த ஜூமா

  வெற்றிகளை மட்டுமே சுவைத்த ஜூமா

  ஜூமா, உம்பெக்கி இடையிலான அதிகாரப்போட்டியில் வென்ற ஜூமா ஆப்ரிக்க அதிபரானதோடு, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் தேர்வானார். தனது அரசியல் பயணத்தில் வளர்ச்சிகளையே சந்தித்து வந்த ஜூமா மீது போடப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளும் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

  அரசின் முடிவுகளில் தலையீடு

  அரசின் முடிவுகளில் தலையீடு

  9 ஆண்டுகால ஆட்சியில் சிறந்த அரசியல்வாதியாக இருந்தவர் மீது திடீரென ஏன் ஊழல் கரை படிந்தது தெரியுமா. இந்தியாவைச் சேர்ந்த, பணக்கார குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்தே காரணம் என்று சொல்லப்படுகிறது.

  மக்களின் கோபத்திற்கு காரணம்

  மக்களின் கோபத்திற்கு காரணம்

  ஜேக்கபின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகி அவர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தன. கடைசியாக நாடாளுமன்றத்தில் ஜூமாவை பதவி விலக வைக்க நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்புகளும் அவருக்கு ஆதரவாகவே இருந்து. எதிர்க்கட்சிகளை முறியடித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்டார்.

  நிர்பந்தித்த கட்சி

  நிர்பந்தித்த கட்சி

  எனினும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஜேக்கப் பதவி விலக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எச்சரித்தன. இதன் விளைவாக உடனடியாக தான் பதவி விலகுவதாக ஜேக்கப் ஜூமா அறிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A humiliating end for Mr. Zuma, a charismatic anti-apartheid hero who was imprisoned on Robben Island with Nelson Mandela and was once the A.N.C.’s intelligence chief.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற