இங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருது வாங்கிய தமிழர்.. புதிய சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருதை அப்துல் பாசித் என்ற தமிழர் ஒருவர் வாங்கி இருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் சர்வதேச அமைதிக்கான கூட்டமைப்பு என்ற அரசு சாரா அமைப்பு இந்த விருதை வழங்கி இருக்கிறது.

அப்துல் பாசித் 15 வருடங்களுக்கு முன்பே பிரிட்டிஷ் சென்று குடியேறி இருக்கிறார். அங்கு தற்போது குடியுரிமை பெற்று இருக்கும் இவர் நிறைய முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

A Man from TN gets Ambassador for Peace Award in England

இவருடைய தாத்தா பிகேஎஸ் கட்டுவா முஹைதீன் சுதந்திர போராட்ட வீரர். அப்துல் பாசித் பல்வேறு நாடுகளில் அமைதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

இலங்கையில் போர் நடந்த சமயத்திலும், அதற்கு பின்பாகவும் இவர் பல்வேறு அமைதி நடவடிக்கைகளில் கலந்து கொண்டு உள்ளார். அதேபோல் தற்போது மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம் பிரச்சனைக்காக குரல் கொடுத்தும், களத்தில் இறங்கியும் வேலை பார்த்து வருகிறார்.

இவரின் செயலை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை உலகில் சில முக்கிய நபர்கள் மட்டும் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை இந்தியர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று அவர் மிகவும் சந்தோசமாக குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Man from TN named Abdul Basit got Ambassador for Peace Award in England. He says ''I dedicate this “Ambassador For Peace” Award to all Indians as a humble Indian from Tamilnadu as a beneficent from its good values. I am standing tall today Internationally.'' after got his award.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற