ஹைதி தீவில் பயங்கர நிலநடுக்கம்.. 304 பேர் பலி.. நூற்றுக்கணக்கானோர் காயம்
ஹைதி : ஹைதி தீவில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் 304 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
Recommended Video
ஹைதி தீவின் தலைநகர் போர்ட் பிரின்ஸில் இருந்து மேற்கு பகுதியில் 125 கி.மீட்டரை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையடுத்து அந்த தீவின் பிரதமர் ஏரியல் ஹென்ரி சம்பவ இடத்திற்கு விரைந்தார். இதுவரை 304 பேர் பலியாகிவிட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சுதந்திர தினம்: தமிழ்நாடு முதலமைச்சர் விருது.. 5 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிப்பு இதுகுறித்து பிரதமர் ஹென்றி கூறுகையில் ஒட்டுமொத்த நாட்டுக்கு ஒரு மாதத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறேன். நிலநடுக்கத்தால் உண்மையான பாதிப்புகள் என்ன என தெரியாத நிலையில் சர்வதேச நாடுகளிடம் உதவிகளை கேட்க மாட்டேன். பல நகரங்கள் முழுவதும் தகர்ந்து விட்டன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும்.
எலும்பு முறிவு , காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைகளில் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தேவைகள் அதிகமாக இருக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு உணவு, முதலுதவியையும் தற்காலிக கூடாரங்களையும் உளவியல் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்றார்.
இந்த நிலநடுக்கச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோர் கேட்டறிந்தனர். தேவையான உதவிகளை செய்வதாக ஜோ பிடன் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications