பூமி போர் அடிக்குது.. அந்த புதிய நாட்டுக்கு நாங்களும் வர்றோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாகி வருகிறது. இதில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தொழிற்சாலைகள், வாகனங்களின் புகை உள்ளிட்டவற்றால் பூமி மாசடைந்து வருவதாக விஞ்ஞானிகள் ஒரு புறம் எச்சரித்து வருகின்றனர். அதேசமயம் பூமிக்கு மாற்றாக மனிதர்கள் வாழும் கோள் உள்ளதா என்ற ஆராய்ச்சியிலும் வல்லரசு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் விண்வெளியில் புதிய நாட்டை ஒன்றும் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஸ் இன்டர்நே‌ஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

விண்வெளியில் புதிய நாடு

விண்வெளியில் புதிய நாடு

அதற்கு ‘அஸ்கர்டியா' என பெயரிடப்பட்டுள்ளது. விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பாரீசில் அறிவித்தார்.

ஏராளமானோர் விண்ணப்பம்

ஏராளமானோர் விண்ணப்பம்

அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விண்வெளியில் உருவாகும் புதிய நாட்டில் குடியேற ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

5 லட்சம் பேர் விண்ணப்பம்

5 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்நிலையில் உலக அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் புதிய நாட்டில் வசிக்க விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனராம்.

2 லட்சம் பேர் தேர்வு

2 லட்சம் பேர் தேர்வு

அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி நாட்டில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் அடிக்கல்

செப்டம்பரில் அடிக்கல்

இந்த விண்வெளி நாட்டின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் அஸ்கர்டியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் வருகிற செப்டம்பரில் அனுப்பப்பட உள்ளது.

ரொட்டி போன்ற அமைப்பில் அடிக்கல்

ரொட்டி போன்ற அமைப்பில் அடிக்கல்

அது ஒரு ரொட்டி போன்ற அமைப்பில் 20 செ.மீ. நீளம் இருக்கும். 2.3 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் உருவாகும் நாட்டில் மக்கள் குடியேறும் முதல் படியாக அஸ்கார்சியா-1 விண்கலம் செயல்படும் என டாக்டர் அசுர்பெய்லி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A new country will be formed in the space named asgardia. Over 5 lakh people from 200 countries have applied to go.
Please Wait while comments are loading...