For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

30000 விலங்குகளைக் கொன்ற பீட்டாவின் கோர முகம்... முன்பே அம்பலப்படுத்திய 'ஒன்இந்தியா'!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தொடங்கியுள்ளது.

பீட்டா அமைப்பின் காப்பகத்திற்கு வரும் விலங்குகளில் 97 சதவீதம் கொல்லப்படுகிறது என்று அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

A strong opposition for PETA

சராசரியாக ஒவ்வொரு வேலை நாளன்றும் 6 விலங்குள் கொல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் எதிர்ப்பு அமைப்பினர்.

A strong opposition for PETA

1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பீட்டா அமைப்பு, தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதாகும். அமைப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு அமெரிக்க வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந் நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் (Center for Consumer Freedom) என்ற மற்றுமொரு தொண்டு நிறுவனம் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'பீட்டா விலங்குகளைக் கொல்கிறது' என்ற பெயரில் ஆதரவு திரட்டி வருகிறார்கள். Petakillsanimals.com என்ற இணையதளத்தில் பீட்டாவுக்கு எதிரான விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

நாடெங்கிலும் Petakillsanimals என்ற முழக்கத்துடன் விளம்பரப்பலகைகள் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் தகவல்ப்படி 1998 ஆம் ஆண்டிலிருந்து 34 ஆயிரம் வீட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.

வெர்ஜினியா கால்நடைத் துறையின் 2010ம் ஆண்டு ஆய்வின் படி 84 சதவீத நாய்களும் பூனைகளும், காப்பகத்திற்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கொல்லப்படுகிறதாம்.

பீட்டா அதிகாரிகள் மீது விலங்குகளை துன்புறுத்தியதற்காக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக petakillsanimals.com இணையதளத்தில் கூறியுள்ளனர். பீட்டாவுக்கு எதிரான மேலும் பல தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் பீட்டாவுக்கு எதிரான விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவின் விலங்குகள் பராமரிப்பை குற்றம் சாட்டி அதன் தலைமையிடம் அமைந்துள்ள அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
There are opposition to PETA in its home country USA by Center for Consumer Freedom organization. A movement named ‘Petakillsanimals’ is organized by this organization and details are provided in their website petakillsanimals.com. It is alleged 97% of animals coming to the PETA shelters are killed, as per the website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X