பயங்கரமாக பசிக்குது.. கொட்டும் பனியில் பாலத்திற்கு அடியில் வாழ்கிறோம்.. உக்ரைனில் கதறும் தமிழக மாணவி

Subscribe to Oneindia Tamil

கீவ் : சுரங்கங்கள், சப்வே, மெட்ரோ ஸ்டேசன் போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாகவும், உணவு இல்லாமல் தவிப்பதாகவும் உக்ரைனில் தவிக்கும் வேளாங்கண்ணியை சேர்ந்த மருத்துவ மாணவி கொட்டும் பனியில் நின்று உருக்கமாக பேசி வீடியோ

உக்ரைன் மீதான 2ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.

குறிப்பாக கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்தார்.

 மீட்க நடவடிக்கை

மீட்க நடவடிக்கை

தலைநகரிலிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வரும் நிலையில், மார்க்கமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு எல்லைகளில் உள்ள இந்திய அதிகாரிகள் அவர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்ப திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயராக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

வலுக்கும் கோரிக்கை

வலுக்கும் கோரிக்கை

வெளியுறவுத்துறை குழுக்கள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உதவ எல்லைகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் தவிக்கும் மக்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் அங்கு சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழக மாணவர்கள்

தமிழக மாணவர்கள்

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் 3 ஆம் ஆண்டு பயின்று வரும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவரது மகள் வின்சியா உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறியுள்ள வின்சியா, குடியிருப்புகளின் சுரங்கங்கள், சப்வே, மெட்ரோ போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாக கூறியுள்ளார்.

உணவில்லாமல் தவிப்பு

உணவில்லாமல் தவிப்பு

மேலும் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார். கொட்டும் பனியில் நின்று வீடியோ வெளியிட்டுள்ள அவர், தான் தங்கி இருக்கும் பகுதியில் சிக்கியுள்ள 8 ஆயிரம் இந்திய மாணவர்களையும், உக்ரைன் நாடு முழுவதுமுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்களையும் மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+