அனுஷ்கா என்னோட ஸ்பெஷல்... ஆனந்தக் கண்ணீரில் விராட் கோஹ்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது உலகம் அறிந்த விஷயம். ஆனால் இருவரும் அதை பற்றி மூச்சுக்கூட விடவில்லை என்பது வேறு விஷயம்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையிலான நட்பு குறித்து, பேட்டி ஒன்றில் முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் கோஹ்லி. அதுவும் வெளிப்படையாகச் சொல்லாமல் வழக்கம்போல மூடி மறைத்து சொல்லியுள்ளார்.

Actress anushka is my special says virat kohli

அவர் கூறும்போது, '2016-ல் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடந்துட்டு இருந்தது. அப்ப அனுஷ்கா என்னை பார்க்க வந்திருந்தாங்க. அப்ப நான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன்.

திடீர்னு கிரிக்கெட் போர்டுல இருந்து போன் அழைப்பு வந்தது. உடனே போனை எடுத்து பேசினேன். அப்பதான், இந்திய அணியோட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கும் உங்களைத் தான் கேப்டனா நியமிச்சிருக்கோம்'னு சொன்னாங்க.

சந்தோஷத்துல எனக்கு என்ன செய்றதுனு தெரியல. எமோஷனாகிட்டேன். தன்னாலயே கண்ணீர் வடிஞ்சுது. விஷயத்தை அனுஷ்காகிட்ட சொன்னேன். அந்த நாள் ரொம்ப அழகானது. நான் வாழ்க்கையில எப்பவும் நினைச்சுட்டே இருக்கிற மாதிரியான நிகழ்வு அது. மெல்போர்ன்ல 2014ல் டெஸ்ட் கேப்டனா முதன் முதல்ல ஆடியபோதும் என்கூட அனுஷ்கா இருந்தாங்க.

அவங்க என்னோட ஸ்பெஷல். இந்த ரெண்டு சம்பவங்களை என்னால மறக்கவே முடியாது' என்று ஐஸ்கிரீமாக உருகி இருக்கிறார் கோஹ்லி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Cricket Team Captain Virat Kohli talks about Anushka Sharma's lucky presence.
Please Wait while comments are loading...