நீட்-டை எதிர்த்துப் போராடும் அமெரிக்கத் தமிழர்களை அவமதிக்க வேண்டாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): நீட்-க்கு எதிரான அமெரிக்கத் தமிழர்களின் போராட்டத்திற்குப் பின்னால் அரசியல் கட்சிகள் இருப்பதாக, தொலைக்காட்சி விவாதத்தில் அதிமுகவின் ஆவடி குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

அதே விவாதத்தில் உடனடியாக மறுத்த அமெரிக்கத் தமிழர் கவிதா பாண்டியன், கண்டனம் தெரிவித்தார். தற்போது அமெரிக்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அபு கான், ஆவடி குமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADMK USA Coordinator condemns party colleague Avadi Kumar

இது குறித்து அபு கான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

"மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை, தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது பிறர் போர் தொடுக்கும் சூழலில், எப்பொழுதாவது வெகுண்டெழுந்து குரல் கொடுக்கும் அரிய சந்தர்ப்பத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆதரவு குரல் எழுப்புவதை கொச்சை படுத்தும் வகையில் பேசிய ஆவடி குமார் அவர்களின் வார்த்தைகள் கண்டனத்துக்குரியது.

ADMK USA Coordinator condemns party colleague Avadi Kumar

அமெரிக்க வாழ் தமிழர்கள் யாருக்கும் அரசியல் செய்து பிழைக்கும் கட்டாயம் இங்கு எழவில்லை. அமெரிக்காவில் தமிழர்கள், பொருளாதார ரீதியாகவும், பதவிகளின் அடிப்படையிலும் உயர்ந்த நிலையில், மற்றவர்கள் போற்றத்தக்க வகையில் வாழ்கிறார்கள். தற்சார்பு கொண்ட அவர்களின் பரபரப்பான அமெரிக்க வாழ்க்கை முறையில், ஆவடி குமார் சொல்வது போன்ற அரசியல் தேவை இங்குள்ள யாருக்கும் அவசியப் படவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

அதே சமயத்தில், இங்கு வாழும் தமிழர்கள் அனைவரும் , நம் தமிழக மற்றும் தேசிய அளவில் நடக்கும் அரசியல் செயல்பாடுகளை / நிகழ்வுகளை மிகுந்த கவனத்தோடு உற்று நோக்குகிறோம் என்பதையும் தெரியப்படுத்த விரும்புறேன். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழகத்தின் மீதும் இந்திய தேசத்தின் மீதும் நாங்கள் பேரன்பும் மாறாத பற்றும் கொண்டவர்கள்.

ADMK USA Coordinator condemns party colleague Avadi Kumar

அதனடிப்படையில், பிரச்சனைகளின் வீரியத்தை கருத்தில் கொண்டு, பொது தளத்தில் ஒற்றுமையாக நின்று எங்களின் எண்ண ஓட்டத்தை ஆதரவாகவும் ,எதிர்ப்பாகவும் பதிவு செய்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு. ஆனால் பொது பிரச்சனைகளில், அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒரே நிலைப்பாட்டில் , ஒத்த கருத்தோடு அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுக்கிறோம்.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் படி, யார் ஒருவரையும் , வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாத சூழ்நிலையில் , திரு.ஆவடி குமார் அவர்களின் வார்த்தைகள் அடிப்படை ஆதாரமற்றவை. தயவு செய்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் மத்தியில் நிலவும் ஒற்றுமை உணர்வை, உங்களை போன்ற இரட்டை நாக்கு அரசியல்வாதிகள் குலைக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறேன்"

இவ்வாறு அமெரிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் அபு கான் அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், எம்ஜிஆர் பிறந்த நாள், அதிமுக வெற்றிவிழா போன்ற நிகழ்வுகளை அபுகான் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். உள்ளூர் அமெரிக்க அரசியல் பிரபலங்களுடனும் இணைந்து பணியாற்றி, அமெரிக்க இந்திய / தமிழ் சமுதாய தேவைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கிறார்.

அமெரிக்கத் தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களுடைய தமிழ்நாட்டு பாசத்தைப் பற்றியும் அறிந்திராத ஆவடி குமார் போன்ற அரசியல்வாதிகள் அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொண்டு, அவர்களுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லதாகும்.

சொந்தக் கட்சியினர் என்றாலும், தயங்காமல் தட்டிக் கேட்கும் அபு கான் போன்றவர்கள் தான் தமிழகத்தின் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்ட அமெரிக்கத் தமிழர்கள் ஆவார்கள்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
American ADMK wing coordinator Abu Khan condemns party spokesperson Avadi Kumar for his remarks on American Tamils who are protesting against NEET. In a statement, Abu mentioned that American Tamils are self sustained and in senior positions of different corporations. There is no need for them any alliance with any political parties of Tamil Nadu. All the protests and support for Tamil Nadu causes from American soil are purely out of love for the country where we all have our roots. As per american law, no one can pressurize anybody for doing such protests or anything, he further added.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற