தாலிபான்களிடையே யுத்தம்: என்னை ஹக்கானி கோஷ்டி போட்டுத் தள்ளலை...துணை பிரதமர் முல்லா பராதர் 'ஆடியோ'
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடையேயான அதிகார யுத்தத்தில் உள்துறை அமைச்சர் ஹக்கானி குழுவினரால் தாம் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை நம்ப வேண்டாம் என துணை பிரதமர் முல்லா பராதர் பெயரில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளனர். தாலிபான்கள் அண்மையில் புதிய அரசாங்கத்தை அறிவித்தனர்.
தாலிபான்களை பஞ்சசீர் மாகாண வடக்கு எல்லைப் போராளிகள் மிக கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தாலிபான்கள், பாகிஸ்தான் ஆதரவுடன் யுத்தம் நடத்தி பஞ்சசீர் மாகாணத்தையும் கைப்பற்றினர்.

தாலிபான்களின் புதிய அரசு
இதையடுத்து முல்லா ஹஸன் அகுந்த் தலைமையிலான இந்த அரசில் தாலிபான்களின் நிறுவனரான முல்லா ஒமரின் உறவினர் முல்லா பரதார் துணை பிரதராக அறிவிக்கப்பட்டார். உலக நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியான சிராஜூதீன் ஹக்கானி, உள்துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டார். தாலிபான்கள் அமைப்பின் பிரதான தலைவராக இருப்பவர் மவுலவி ஹெபதுலா அகுந்த்ஸாதா. ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. மேலும் துணை பிரதமரா பராதருடன் மவுலவி அப்துல் சலாம் ஹனாஃபியும் அறிவிக்கப்பட்டார். ஆப்கான் பாதுகாப்பு அமைச்சராக மவுலவி முகமது யாகூப் முஜாஹித், வெளியுறவு அமைச்சராக மவுலவி ஆமீர்கான் முட்டாக்கி, நிதி அமைச்சராக ஹிதாயதுல்லா பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

முல்லா ஹஸன் அகுந்த் யார்?
புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட முல்லா ஹஸன் அகுந்த், தாலிபான்களின் நிறுவனர் முல்லா ஒமரின் நெருங்கிய கூட்டாளி. 1996-2001-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியில் துணை பிரதமராகவும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார். கந்தஹார் மாகாண ஆளுநராகவும் இருந்தார்.

சர்வதேச முகம் முல்லா பரதார்
ஆப்கான் புதிய அரசு முல்லா பரதார் தலைமையில்தான் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் உலக நாடுகளுடன் தாலிபான்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியவர் முல்லா பராதர். அமெரிக்காவுக்கும் சென்று அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். அதாவது தாலிபான்களின் சர்வதேச முகமாக அறியப்பட்டவர்.
Recommended Video

ஹக்கானி குழு
ஆனால் புதிய ஆப்கான் அரசில் ஹக்கானி குழுவினரின் ஆதிக்கமே கை ஓங்கி இருந்தது. ஹக்கானி குழுவினர், ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் இணக்கமாக இருந்தனர். தற்போது தலைநகர் காபூல் ஹக்கானி ஆயுத குழுவினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

முல்லா பரதார் கொல்லப்பட்டாரா?
இதனிடையே புதிய அரசாங்கத்தில் யார் கை ஓங்குவது என்கிற அதிகார யுத்தம் தாலிபான்களிடையே ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதில்தான் ஹக்கானி குழுவினரால் முல்லா பராதர் படுகாயமடைந்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் காபூலில் நேற்று இரவு நடந்த மோதலில் முல்லா பராதரை ஹக்கானி கோஷ்டி படுகொலை செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில் தாம் படுகாயமும் அடையவில்லை; கொல்லப்படவும் இல்லை; அத்தனையும் தவரான தகவல்கள் என முல்லா பராதர் பேசும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications