For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடுப்பூசியா.. அலறி ஓடும் ஆப்பிரிக்க மக்கள்.. 13 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ரிட்டர்ன்.. என்ன காரணம்?

தடுப்பூசிகளை போட மறுக்கிறார்கள் ஆப்பிரிக்க நாட்டு மக்கள்

Google Oneindia Tamil News

கேப்டவுன்: ஆப்பிரிக்க மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவே மறுக்கிறார்களாம்.. தடுப்பூசியை பார்த்தாலே பயப்படுகிறார்களாம்.. இதனால், அவர்களுக்கான தடுப்பூசிகள் அப்படி அப்படியே திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.. இதற்கு என்ன காரணம்?

கொரோனா நோய் உலகம் முழுவதும் தொற்றி பீடித்து உள்ளது.. அந்த வகையில், ஆப்பிரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த வருடம் தொற்று பரவியபோதே, ஆப்பிரிக்க காடுகளுக்குள்ளும் தொற்று ஊடுருவி பரவிவிட்டது..!

ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.. ஆனால், ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை குறைவுதான்.. பரப்பளவில்தான் அதிகமே தவிர, மக்கள் அடர்த்தி குறைவு.. தொழில் காரணமாக, ஆங்காங்கே பிரிந்து வாழ்பவர்கள்.. இதுதான் ஒருவகையில் பிளஸ் பாயிண்ட்டாகவும் உள்ளது.

 மக்கள் தொகை

மக்கள் தொகை

அடர்த்தியான மக்கள் பகுதி இல்லாததால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.. அதேசமயம், தொற்று பரவாமலும் இல்லை.. இதைவிட சிக்கல், தொற்று பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்க முடிவதில்லை.. ஏனென்றால், அங்கு படிப்பறிவு குறைவு... சுகாதாரமும் குறைவு.. ஆஸ்பத்திரிகளும் குறைவு.. டாக்டர்கள், நர்சுகளும் குறைவாக இருக்கிறார்கள்.

 நோய் தீவிரம்

நோய் தீவிரம்

அதனால், தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை தர முடியாத நிலைமை உள்ளது.. இதனால், ஐசியூவில் சேர்க்கப்படும் அளவுக்கு நோயின் தீவிரம் அதிகமாகி விடுகிறது.. இதனால், உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.. இதில் இன்னொரு சிக்கலும் எழுந்துள்ளது.. ஆப்பிரிக்க மக்களுக்காக ஐநா சபை மூலம் தடுப்பூசி அனுப்பப்பட்டு வருகிறது...

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

ஆனால், இந்த மக்களிடம் இந்த நோய் தடுப்பு பற்றின விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது... அதிலும் தடுப்பூசியை பார்த்தாலே அலறி ஓடுகிறார்கள்.. தடுப்பூசியே வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.. தடுப்பூசியை போட்டால் குழந்தைப்பேறு பிரச்சினை ஏற்படலாம் என்று யாரோ இவர்களிடம் கிளப்பி உள்ளனர் போலும்..அதனால், தடுப்பூசியை போட யாருமே முன்வரவில்லை.. அந்த வகையில், காங்கோ நாட்டில் 13 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர்..

 நோய்

நோய்

இதுதான் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.. இப்போதைக்கு பெரிய அளவு அங்கு நோய் பரவல் இல்லை என்றாலும், ஒருவேளை நோய் வேகமாக பரவிட்டால், அப்போது நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போய், ஆபத்தில் முடிந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.. தடுப்பூசி இல்லாமல் நாம் இங்கு அவதிப்பட்டு கொண்டிருந்தால், கிடைத்த தடுப்பூசியை திருப்பி அனுப்பிய இந்த மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?!

English summary
African nations avoid Corona vaccines
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X