'இதுதான் புதிய ஸ்வஸ்திகா..' ரஷ்யாவின் அடையாளமாக மாறும் Z லெட்டர்.. என்ன செய்ய திட்டமிடுகிறார் புதின்
மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 2ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், ஆங்கில லெட்டர் Z ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு ஆதரவான சின்னமாக மாறியுள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது கடந்த பிப். 24ஆம் தேதி முழுவ வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க அதிபர் புதின் உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்ய எல்லை வழியாகவும் பெலராஸ் வழியாகவும் உக்ரைன் நாட்டிற்குப் புகுந்து தாக்குதலைத் தொடங்கியது.
அப்போது முதலே உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் சின்னமாக ஆங்கில லெட்டர் Z மாறியது. சர்வதேச அளவில் பலரும் Z லெட்டரை தங்களின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவிக்கப் பயன்படுத்துகின்றனர்.

எப்படி ஆரம்பித்தது
உக்ரைன் எல்லையில் ரஷ்யா களமிறக்கிய ராணுவ வாகனங்களில் தான் முதலில் இந்த Z லெட்டர் இருந்தது. Z லெட்டர் மட்டமின்றி, ஆங்கில எழுத்துக்களான O, X, A மற்றும் V எழுத்துகளும் கூட ரஷ்ய ராணுவ வானங்களில் இருந்தன. எதற்காக இது போன்ற ஆங்கில லெட்டர்கள் எழுதப்பட்டிருந்தது என யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. சிலர் Z என்பது உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கியையும், V என்பது விளாடிமிர் புதினையும் குறிப்பதாகச் சொல்கின்றனர்.

என்ன காரணம்
இன்னும் சிலர் ரஷ்யா ராணுவ வாகனங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் இந்த லெட்டர்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் இது போர் களத்தில் ரஷ்ய ராணுவமே தனது வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க உதவும் எனக் கூறப்பட்டது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூட அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Z மற்றும் V எழுத்துக்களின் கிராபிக்ஸ்களையும் வெளியிட்டுள்ளது. அதிலும் இதற்கான காரணத்தை ரஷ்யா விளக்கவில்லை. சிலர் Z என்பது 'Za pobedy' (வெற்றி) அல்லது 'Zapad' (மேற்கு) என்று பொருள்படும் என்று கூறுகின்றனர், V என்பது 'உண்மையின் சக்தி' என்பதைக் குறிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆதரவு
இப்படி பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இதற்கு உறுதியான காரணத்தை ரஷ்யா இதுவரை அறிவிக்கவில்லை.அதேநேரம் ரஷ்ய மொழியில் Z மற்றும் V ஒலி தரும் எழுத்துக்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Z லெட்டர் எதைக் குறித்தாலும் கூட, சர்வதேச அளவில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் ஒரு சின்னமாக இப்போது இந்த Z லெட்டர் உருவெடுத்துள்ளது. Z லெட்டருடன் கார் பேரணி, பைக் பேரணி எனப் பலவற்றை நடத்தி, ரஷ்யாவுக்கான ஆதரவைப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரஷ்யாவின் திட்டமா
ரஷ்யாவின் இந்தப் போருக்கு ஆதரவு பெறும் நடவடிக்கைக்கும் இந்த Z லெட்டரை ரஷ்ய அரசு பயன்படுத்துகிறது. போர் ஆரம்பித்த உடனேயே Z லெட்டர் உடன் கூடிய டி-ஷர்ட்களை ரஷ்யா விற்கத் தொடங்கியது. அதேபோல ரஷ்யாவின் பல பகுதிகளில் Z எழுத்துடன் கூடிய ஆடைகளை அணிந்து , ஃபிளாஷ் மாப் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியது. இருப்பினும், ரஷ்யாவின் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வரும் நிலையில், அதைத் திசை திருப்பும் வகையில் ரஷ்ய அரசே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஜிம்னாஸ்டிக் வீரர்
சில இடங்களில் பள்ளி மாணவர்களும் கூட Z வடிவத்தில் நிற்கும் படங்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரரான இவான் குலியாக், சர்வதேச போட்டி ஒன்றில் தங்கப் பதக்கம் வென்ற உக்ரைனின் இலியா கோவ்டுனுக்குப் பக்கத்தில் Z லெட்டருடன் கூடிய டிசர்ட்டை அணிந்து நின்றது சர்வதேச அளவில் பேசுபொருளானது. இதையடுத்து இவான் குலியாக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாஜி படைகள்
அதேபோல ரஷ்யாவில், மேற்கு சைபீரிய பிராந்தியமான குஸ்பாஸின் கவர்னர் செர்ஜி சிவிலியோவ், தனது பிராந்தியத்தின் பெயரை Z லெட்டர் வருவது போல மாற்றிக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவில் சில இடங்களில் வீடுகளின் கதவுகளில் Z லெட்டர் தென்பட தொடங்கி உள்ளது. இதையடுத்து ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் சின்னமான ஸ்வஸ்திகா உடன் Z லெட்டரை ஒப்பிட்டுப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நகை முரண்
2ஆம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரின் நாஜி படைகளால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்த ரஷ்யா, இப்போது அதே தந்திரத்தைப் பயன்படுத்துவதாகப் பலரும் சாடி வருகின்றனர். அதிலும் உக்ரைனில் அதிகரிக்கும் நாஜி கலாசாரத்தை தடுக்கவே ரஷ்யா இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய உள்ளதாக புதின் கூறுவது நகை முரண் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications