ரஷ்யாவுக்கு பறக்கும் ‘ராஜதந்திரி’.. இறக்குமதி ஆகும் ’இரும்பு அரக்கன்’.. பாக்., இனி வாலாட்ட முடியாது!
டெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எதிர்வரும் வாரம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்திற்கு பயணம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின் போது, இந்தியா வாங்கியுள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் மீதமுள்ள இரண்டு யூனிட்களை விரைவில் இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அஜித் தோவல் வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், புதிய S-400 ஒப்பந்தங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளாகவே இந்தியா மீது பயங்கரவாதிகள் மூலம் மறைமுகத் தாக்குதலை பாகிஸ்தான் தொடுத்து வருகிறது. அந்நாட்டிற்கு ஆதரவாக சீனா பின்னணியில் இருந்து செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதே நேரத்தில் உலகில் மிகப்பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா தனது முப்படைகள் மூலம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதற்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அத்துமீறிய நிலையில் இந்தியா அவற்றை தாக்கி அழித்து பதிலடி கொடுத்ததோடு, பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலின் போது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் மட்டுமல்லாது, ரஷ்யாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு மிக்க உறுதுணையாக இருந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையேயான ஒப்பந்தத்தின் போது இந்த பாதுகாப்பு அமைப்பு வாங்கப்பட்ட நிலையில் போரில் அதன் பலன் பெரிய அளவில் இருந்தது.
இந்த நிலையில் தான் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித். சீனியர் பாதுகாப்பு பிரதிநிதிகள் சந்திப்பு - 13வது சர்வதேச மாநாடு என்ற பெயரில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கவே இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போதே, இந்தியா ரஷ்யா இடையே உள்ள முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் தொடர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவிருக்கின்றன. அதுவும் முக்கியமாக, இந்தியா வாங்கியுள்ள S-400 ஏர் டிஃபென்ஸ் (வான் பாதுகாப்பு) அமைப்பின் மீதமுள்ள இரண்டு யூனிட்களை விரைவில் இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அஜித் தோவல் இந்த சந்திப்பில் வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்பில், ரஷ்ய பாதுகாப்பு செயலாளர் செர்கேய் ஷோய்கூ தலைமையிலான மாநாட்டில் அஜித் தோவல் பங்கேற்கவுள்ளதோடு, தனிப்பட்ட இரு தரப்புக் சந்திப்புகளும் நடைபெற உள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை முற்றிலும் ஒழிக்க இந்தியா, ரஷ்யாவிடம் உறுதியான அரசியல் ஆதரவை எதிர்பார்க்கும் நிலையில், இந்த சந்திப்பு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியா-ரஷ்யா இருநாடுகளும் பல ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டங்களில் கூட்டாளிகளாக இருந்து வந்துள்ளன. மேலும், ரஷ்யா பி-5 நாடுகளில் ஒன்றாக இருப்பதுடன், யூரேசியா பகுதியின் முக்கிய சக்தியாகவும் உள்ளதால், இந்த சந்திப்பில் நடைபெறும் உரையாடல்கள் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதிய S-400 ஒப்பந்தங்கள் குறித்தும் இருநாடுகளும் ஆலோசிக்கவுள்ளன. இந்த பயணத்திற்கு முன்னதாக, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் மாஸ்கோ சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பிறகு நடக்கும் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சிந்தூர் ஆபரேஷனில் பிரமோஸ் ஏவுகணை (இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சி), S-400 உள்ளிட்ட பல ரஷ்யா உருவாக்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், பாதுகாப்புத் துறையில் ரஷ்யாவும் இந்தியாவும் கொண்டுள்ள இணைப்பு மேலும் வலுப்பெற்றது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications