கொரோனாவை போன்ற வேகம்.. எபோலாவை போன்ற கொடூர பாதிப்பு.. அடுத்த தலைவலி மார்பர்க் வைரஸ்.. அலறும் WHO
ஜெனீவா: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரவே நாம் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அதி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் பாதிப்பால் கினியா நாட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்தே நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை. கொரோனா வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்தச் சூழலில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் பாதிப்பு கினியா நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்பர்க் வைரஸ்
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவில் கடந்த ஜூலை 25ஆம் தேதி ஒருவருக்கு அதி தீவிரமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அவருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது. இது சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

88% உயிரிழப்பு
இந்த மார்பர்க் வைரஸ் வௌவால்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. எபோலா மற்றும் கொரோனா வைரசைப் போலவே இதுவும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய ஒரு வைரஸ் ஆகும். ஆனால் அந்த இரண்டு வைரசுகளைவிட இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த மார்பர்க் வைரசால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 88% பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது கொரோனாவை போன்ற வேகமாகப் பரவும் அதேநேரம் எபோலாவை போன்ற கொடூர பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.

எப்படி பரவும்
இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து ஒரு மனிதருக்குப் பரவிய பின்னர், அவரிடம் இருந்து பலருக்கும் பரவும் ஆற்றல் கொண்டது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஒருவரது உடலில் இருந்து வெளியேறும் உமிழ் நீர், வியர்வை ஆகியவை மூலம் மற்றவர்களுக்குப் பரவும். ஒருவர் வௌவால்கள் அதிகம் இருக்கும் குகை அல்லது சுரங்கம் போன்ற இடங்களில் அதிக காலம் இருக்கும்போது, அவர்களுக்கு இந்த மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அறிகுறிகள் என்ன
இந்த மார்பர்க் வைரசால் பாதிக்கப்பட்ட 5 முதல் 10 நாட்களுக்குப் பிறகு திடீரென ஒருவருக்குக் காய்ச்சல், தலைவலி ஆகியவை ஏற்படும். அதேபோல இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோசமான உடல் வலியும் ஏற்படும். குமட்டல், வாந்தி, மார்பு வலி, தொண்டைப் புண், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை வைரஸ் தொற்று ஏற்பட்ட மூன்றாம் நாளில் இருந்த ஏற்படத் தொடங்கும். இன்னும் சிலருக்கு மஞ்சள் காமாலை, உடல் எடை இழப்பு, மயக்கம், கல்லீரல் செயலிழப்பு, போன்ற தீவிரமான அறிகுறிகளும் ஏற்படும்.
Recommended Video

சிகிச்சை என்ன
இதுவரை, மார்பர்க் வைரசுக்கு நிரூபிக்கப்பட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. அதேநேரம் மருத்துவச் சிகிச்சை, ஆக்சிஜன் நிலையை முறையாக வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தைப் பராமரிப்பது போன்றவை மூலம் உயிரிழப்புகளைத் தடுக்கலாம். கொரோனா வைரசை போலவே இதற்கும் முறையான சிகிச்சை இல்லை. அதேநேரம் இது கொரோனாவைவிட பல மடங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் உலக சுகாதார அமைப்பு இது பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கினியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications