For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்லூரிகளில் குவியும் பாலியல் புகார்கள்- விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறம்பட விசாரித்துள்ளதா, என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஹார்வார்டு, சிகாகோ பல்கலைக்கழகங்கள், ஆக்சிடென்டல் கல்லூரி உட்பட 55 கல்லூரிகள் மற்றும் பல்கலை.களில் பாலியல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு நடத்த அமெரிக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Obama

அமெரிக்க கல்லூரிகளில் மாணவிகளை சகமாணவர்கள், ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஒபாமா நிர்வாகம் இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

உலக அளவில் பிரபலமான ஹார்வார்டு யுனிவர்சிட்டியும் இந்த விசாரணை வரம்பில் இருந்து தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்றாண்டுகளில் 100த்துக்கும் மேற்பட்ட பாலியல் பிரச்சனை புகார்களை இப்பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டுள்ளபோதிலும் அதன் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

2007ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அமெரிக்க கல்லூரிகளில் ஐந்தில் ஒரு மாணவி, தனது கல்லூரி காலத்தை முடிக்கும் முன்பாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக தெரியவந்தது இந்த விசாரணையில் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

English summary
The Obama administration named 55 colleges and universities nationwide, for a federal investigation into their handling of sexual abuse allegations by student victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X