For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ஆண்டுக்கு ஒருமுறை இனத்தையே மாற்றிக் கொள்ளும் அமெரிக்கர்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பல லட்சம் அமெரிக்கர்கள் தங்களது இனத்தின் பெயரையே மாற்றிக் கொண்டிருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2000மாவது ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புக்கும், 2010ம் ஆண்டின் கணக்கெடுப்பையும் ஒப்பிட்டுப்பார்த்ததில் இது தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை ஆய்வு...

மக்கள் தொகை ஆய்வு...

அமெரிக்காவின் வருடாந்திர மக்கள்தொகை சங்கத்தின் கூட்டம் வாஷிங்டன்னில் நடந்தது. அதில், மக்கள் தொகை ஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அமெரிக்காவில் வசிப்போர் தங்களது இனத்தை மாற்றிக் கொண்டுவருவது தெரியவந்தது.

பிற இனத்தவர்...

பிற இனத்தவர்...

2000வது ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அமெரிக்காவில் வசிக்கும் பிற இனத்தவர் என்று குறிப்பிப்பிட்டுள்ள அதே நபர்கள் தற்போது தங்களை அமெரிக்காவில் வசிக்கும் வெள்ளையர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க இந்தியர்கள்...

அமெரிக்க இந்தியர்கள்...

இந்தியர்களில் 775,000 பேர் தங்களை அமெரிக்க இந்தியர்கள் என்று குறிப்பிட்டதை மாற்றிக்கொண்டு வெள்ளை மற்றும் அமெரிக்க இந்தியர்கள் என்றும் அல்லது வெறுமனே வெள்ளையினத்தவர் என்றும் தங்களை குறிப்பிட்டுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பெற்றோர் பதிந்த இனத்தை பிள்ளைகள் மாற்றிக்கொண்டதாலும் இனமாற்றம் அதிக அளவுக்கு நடந்துள்ளது.

சமூகத்தில் உயர் அந்தஸ்துக்கு...

சமூகத்தில் உயர் அந்தஸ்துக்கு...

இவ்வாறு லட்சக்கணக்கான அளவில் தங்களது இனத்தை அமெரிக்கர்கள் மாற்றிக்கொண்டுள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்கர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று சொல்வதன் மூலமாக சமூகத்தின் உயர் அந்தஸ்துக்கு தங்களால் செல்ல முடியும் என்று அங்குள்ள பிற இனத்தவர்கள் நினைப்பதுதான் இந்த மோகத்துக்கு காரணம் எனஅறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

English summary
2010censusraceMillions of Americans counted in the 2000 census changed their race or Hispanic-origin categories when they filled out their 2010 census forms, according to new research presented at the annual Population Association of America meeting last week. Hispanics, Americans of mixed race, American Indians and Pacific Islanders were among those most likely to check different boxes from one census to the next.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X