தப்பி செல்லும் போது பரிதாபம்.. ஆப்கான் ராணுவ விமானம் உஸ்பெகிஸ்தானில் விழுந்து விபத்து.. பின்னணி
தஷ்கெந்த்: ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் உஸ்பெகிஸ்தானில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விமானிகள் இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Recommended Video
ஆப்கானிஸ்தானை மொத்தமாக தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது. நேற்று காபூலை தாலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் மொத்த நாடும் தாலிபான்கள் வசம் சென்றது. பல்வேறு மாகாணங்களில் தாலிபான்கள் படைகளிடம் ஆப்கான் ராணுவ வீரர்கள் எந்த மோதலும் இன்றி சரண் அடைந்த காரணத்தால் எளிதாக ஆப்கானிஸ்தான் தாலிபான் படைகள் வசம் சென்றது.

தாலிபான் படைகளின் மூர்க்கத்தனத்தால் பல்வேறு இடங்களில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தாலிபான்களிடம் சரண்டர் ஆனார்கள். அதோடு சில ஆப்கானிஸ்தான் வீரர்கள் அருகில் இருக்கும் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடி உள்ளனர். தாலிபான் ஆட்சிக்கு கீழ் இருக்க விருப்பம் இன்றி ஆப்கானிஸ்தான் படையினர் பலர் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்று வருகிறார்கள்.
ஆப்கான் ராணுவ வீரர்கள் பலர் உஸ்பெகிஸ்தானுக்கு தப்பி ஓடி வரும் நிலையில்தான் ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் உஸ்பெக்கிஸ்தானில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. உஸ்பெக்கிஸ்தானின் தென்மேற்கு சுர்சோன்டார்யோ பகுதியில் இந்த விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. நேற்று இரவில் விமானம் விபத்துக்கு உள்ளான நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் ராணுவ வீரர்கள் தப்பிச்செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல இப்படி ராணுவ விமானம் மூலம் தப்பி செல்கிறார்கள். விமானத்தில் இருந்த 2 ஆப்கான் விமானிகள் காயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற இந்தியர்கள் சிலரும் இந்த விமானத்தில் இருந்ததாக தகவல்கள் வருகின்றன.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் 88 ராணுவ வீரர்கள் உஸ்பெகிஸ்தான் தப்பிச்செல்லும் போது உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications