ஆப்கானிஸ்தானில் ட்விஸ்ட்.. சட்டப்படி நானே இனி அதிபர்.. துணை அதிபர் அம்ருல்லா சாலே ட்வீட்
காபூல் : ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவான நிலையில், ஆப்கானிஸ்தானிற்கு சட்டப்படி நானே இனி அதிபர் (பொறுப்பு அதிபர்) என துணை அதிபர் அம்ருல்லா சாலே ட்வீட் போட்டுள்ளார். இந்த ட்வீட் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இவரை அதிபராக தாலிபன்கள் ஏற்பார்களா என்பது தெரியவில்லை.
காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதால், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
நாட்டின் ஆட்சி பொறுப்பை முறையாக அவர் தாலிபன்களிடமோ அல்லது இடைக்கால அரசிடமோ ஒப்படைக்கவில்லை. உயிருக்கு பயந்து அவர் தப்பிஓடிவிட்டதால். அங்குள்ள அமைச்சர்களும் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். ஆப்கன் அரச படைகள் எதிர்ப்பே இல்லாமல் சரண் அடைந்துவிட்டன.

அமைதியின்மை
தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானில் குழப்பமான நிலை காணப்படுகிறது. தாலிபன்களின் அரசு பதவியேற்று சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் வரை அமைதியின்மையே நீடிக்கும் என்பதாக அங்கு உள்ள நிலை காணப்படுகிறது. அமெரிக்க படைகளுக்கு உதவியர்கள். ஆப்கன் அரச படைகளுக்கு உதவியர்கள் மிகுந்த அச்சதுடன் வாழ்கிறார்கள். எப்படியாவது நாட்டை விட்டு தப்பிவிட முடியுமா என்று பலர் பரிதவிக்கிறார்கள்.

பெண்கள் கல்வி
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள தாலிபன்களை கொஞ்சம் கொஞ்சமாக நிலைமையை சரிசெய்து வருகிறார்கள். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, நகரில் கடைகளில் பொருட்கள் சூறையாடுவதை தடுப்பது போன்ற பணிகளை தொடங்கி உள்ளனர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் பெண்களுக்கு கல்வியில் அரசியலில் முக்கியத்துவம் என்றும். ஊடகத்தினர், மற்ற நாட்டு தூதர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
Recommended Video

நானே இனி அதிபர்
ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தப்பியோடிவிட்டதால், போர்கால சூழலில் நானே இனி அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே டுவிட்டரில் அதிரடி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் ஒன்றை விளக்க இருக்கிறேன். ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர் இல்லை என்றால், நாட்டை விட்டு ஓடிவிட்டால், ராஜினாமா செய்து விட்டால் அல்லது காலமானால் துணை அதிபர்தான் காபந்து அதிபராவார்.

சட்டப்படி நான் காபந்து அதிபர்
நான் தற்போது நாட்டிற்குள்தான் இருக்கிறேன். சட்டப்படி நான்தான் காபந்து அதிபர். அனைத்து தலைவர்களிடமும் ஆதரவையும் ஒருமித்த கருத்தையும் பெற நான்அவர்களை அணுகி வருகிறேன்" என்று கூறியுள்ளார். இவரது கருத்தை ஏற்று அதிபராக தாலிபன்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறி தான். தாலிபன்கள் யாரை அதிபராக அறிவிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications