பாகிஸ்தானில் 70 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த சீக்கியர் கோவில் திறப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 70 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த சீக்கியர்கள் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருக்கும் ஹஸ்திநாக்ரி பகுதியில் உள்ளது பாய் பீபா சிங் சீக்கியர்கள் கோவில். இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தானில் இருந்த இந்தியர்கள் கிளம்பிய பிறகு அந்த கோவில் மூடப்பட்டது.

கடந்த 70 ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவில் வழிபாட்டிற்காக கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோவிலை திறந்த உடன் சீக்கியர்கள் அங்கு பூஜை நடத்தினர்.
இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து உரிமை இயக்க தலைவர் ஹாரூன் சரப்தியால் கூறுகையில்,
வரலாற்று சிறப்புமிக்க சீக்கியர் கோவிலை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கும் சமமான உரிமை அளிக்கப்படுவது தெரிய வந்துள்ளது என்றார்.
கைபர் படுங்க்வா மாகாண முதல்வரின் சிறப்பு உதவியாளர் சர்தார் சுரன் சிங் கூறுகையில்,
இத்தனை ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவிலை திறக்கும் முடிவை எடுத்து சிறுபான்மையினருக்கு உரிய உரிமையை அரசு வழங்கியுள்ளது என்றார்.
கோவிலுக்கு ரூ.30 லட்சம் நன்கொடை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சுரன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications