For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ்டர் மொக்கச்சாமி இந்த மாத்திரையைச் சாப்பிடுங்க... செல்பி எடுக்கற எண்ணமே வராது!

Google Oneindia Tamil News

லண்டன்: செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி- செல்பி மாத்திரைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

வயது வித்தியாசம் இல்லாமல் தற்போது அனைவரிடமும் செல்பி மோகம் தலைவிரித்து ஆடுகிறது.

ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனில், கேமராவை வைத்துக் கொண்டு செல்பியாய் எடுத்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிடுவதை சிலர் கடமையாகவே கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர்.

மனநோய்...

மனநோய்...

ஆனால், இவ்வாறு செல்பி எடுப்பது ஒரு வகை மனநோய் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதனால் பல சமயங்களில் செல்பி எடுப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

ஆன்டி செல்பி மாத்திரைகள்...

ஆன்டி செல்பி மாத்திரைகள்...

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆன்டி செல்பி மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர்.

புதினா வாசனையுடன்...

புதினா வாசனையுடன்...

இந்த மாத்திரைகள் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை புதினா வாசனையுடன் இனிப்பாக இருக்கும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

பிளாசிபோ விளைவு...

பிளாசிபோ விளைவு...

இந்திய மதிப்பில் இந்த மாத்திரையின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் ஆகும். இது போலி மருந்தாக இருந்தாலும், இது நம்மை குணமாக்கும் என்ற பிளாசிபோ விளைவை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இது செல்பி எடுப்பதற்கு முன்பு சாப்பிடுவதா அல்லது செல்பி எடுத்த பின்னர் சாப்பிடுவதான்னு மட்டும் யாரும் கேட்டுடாதீங்கப்பா...!

English summary
If you can't brush your teeth or wipe your arse without whipping out your front camera for a quick pic, the chances are these Anti Selfie Tablets are coming your way sometime soon after a company launched the product earlier this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X