ஆப்பிள் ஐபோன்10 எக்ஸ்குளூசிவ் வீடியோவை வெளியிட்ட மகள்.. வேலை இழந்த தந்தை!

Subscribe to Oneindia Tamil

சான்பிரான்சிஸ்கோ : ஆப்பிள் 10 போனின் வீடியோவை வெளியிட்ட மகளால் தந்தைக்கு வேலை பறிபோனது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் தனது புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பரிலும் ஐபோன் 8 அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயம் ஆப்பிள் ஐபோன்கள் வெளியாகி 10 ஆண்டுகளைக் குறிக்கும் விதமாக ஐபோன் 10 அறிமுகப்படுத்தப்பட்டது.

Apple Company Engineer Loses his job because of his Daughter

இதுவரை வந்த போன்களிலேயே அதிக தொழில்நுட்பம் கொண்டதாக அமைந்த ஐபோன் 10 ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான ஒரு மைல்கல். அதனால் அதை மிகவும் இரகசியமாக வைத்திருந்தது ஆப்பிள். இந்நிலையில் உலகம் முழுவதிலும் கடந்த அக்டோபர் 27ம் தேதி ஐபோன் 10க்கான முன்பதிவு நடந்தது.வரும் நவம்பர் 3ம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது இந்த போன்.

இந்நிலையில் ஐபோன் 10 குறித்த வீடியோவை வெளியானது. அதை ரூப் கமாலியா பீட்டர்சன் என்கிற பெண் வெளியிட்டார். இதனையடுத்து ஆப்பிள் நிறுவனம் விசாரணையில் இறங்கியது. விசாரணையில் அந்தப் பெண்ணின் தந்தை பீட்டர்சன் என்பவர் ஆப்பிள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

தன் மகளிடம் காட்டுவதற்காக ஐபோன் 10 வீட்டிற்கு எடுத்துச் சென்றதும், அதை வைத்துத்தான் கமாலியா வீடியோ வெளியிட்டதும் தெரியவந்துள்ளது. தற்போது நிறுவன இரகசியத்தை வெளியிட்டதற்காக பீட்டர்சன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Apple Company Engineer loses his job after her daughter releases Apple 10 exclusive video on Internet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X