பாகிஸ்தான், எமிரேட்ஸ், குவைத், லெபனான், துருக்கி என 10 நாடுகளை உலுக்கிய ‘ஈராக்’ நிலநடுக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்- ஈரான் எல்லையில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், லெபனான், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகளை அதிர வைத்திருக்கிறது.

ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பயஙகர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 7.3 ஆக பதிவாகி இருந்தது.

Arab World also felt tremor

இந்நிலநடுக்கத்தால் ஹலாப்ஜா நகரே உருக்குலைந்து போயுள்ளது. அத்துடன் ஈராக்கின் அத்தனை மாகாணங்களையும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி எடுத்திருக்கிறது.

இதனால் வீடுகள், கட்டிடங்களை விட்டு பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். அதேநேரத்தில் இந்நிலநடுக்கமானது ஈராக் உட்பட 10 நாடுகளையும் அதிர வைத்திருக்கிறது.

ஈராக், ஈரான், துருக்கி, சிரியா, குவைத், ஜோர்ட்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா ஆகிய நாடுகளையும் இந்நிலநடுக்கம் குலுங்க வைத்திருக்கிறது. வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
UAE residents and people across the Arab World took to social media to report that they have felt some tremor

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற