For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலாய் லாமா வருகை சர்ச்சை- அருணாசல பிரதேசத்தின் 6 மாவட்டப்பெயர்களை மாற்றியது சீனா

By BBC News தமிழ்
|

தலாய் லாமா இந்தியாவில் விஜயம் மேற்கொண்டதற்கு "பதிலடி கொடுக்கும்" விதத்தில் இமாலய எல்லை பகுதிகளில் இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய ஆறு மாவட்டங்களுக்கு சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது.

கோப்புப் படம்
EPA
கோப்புப் படம்

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்திற்கு, 81 வயது திபத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா விஜயம் செய்தார்.

தலாய் லாமாவின் விஜயம் இருதரப்பு உறவுகளிலும் "எதிர்மறையான விளைவுகளை" ஏற்படுத்துவதாகவும், சீனாவின் விருப்பதை இந்தியா நிராகரிப்பதாக போல் உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

செவ்வாய்க்கிழமையன்று சீனா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு இந்தியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், தலாய் லாமாவின் வருகை முற்றிலும் மத ரீதியானது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது அருணாச்சல பிரதேசிற்கான தலாய் லாமாவின் முதல் விஜயம் அல்ல; அவர் ஏற்கனவே 1983, 1997, 2003-ல் இரண்டு முறை மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா வருவதற்கு சீனா எதிர்ப்பு

கிழக்கு திபத்தில் சீனாவிற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் இந்திய கட்டுப்பாட்டிற்குள்ள சில பகுதிகளில் உள்ள ஆறு இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது என சீன அரசு ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

அருணாச்சல பிரதேசத்திற்கான தனது விஜயத்தை தலாய் லாமா, நிறைவு செய்த அடுத்த நாளின் தேதி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பகுதிகளில் உள்ள பிராந்தியங்களில் அதிகாரபூர்வ பெயர்களை சீனா மாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்னதாக, திபத் சீனாவிற்கு உட்பட்டது என்ற இந்தியாவின் நிலையில் மாறுதல் இல்லை என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்திருந்தார்.

தன்னை காப்பாற்றிய சிப்பாயை 60 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தார் தலாய் லாமா

இந்தியக் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் தலாய் லாமா - சீனா கண்டனம்

BBC Tamil
English summary
China has renamed six districts along a disputed Himalayan border region with India, in a move seen as "retaliation" for a visit by the Dalai Lama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X