அச்சுறுத்திய இர்மா... பூங்காவில் இருந்து அற்புறப்படுத்தப்பட்ட ஃப்ளெமிங்கோ.. வீடுகளில் அன்ன நடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : இர்மா புயலால் ஃப்ளோரிடா மாகாணம் உருக்குலைந்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது போல விலங்குகளும் பூங்காக்களில் இருந்து பாதுகாப்பாக இடம்பெயர்வு செய்யப்பட்டுள்ளன.

சூறாவளியால் மற்றும் மழையால் ஃப்ளோரிடா மாகாணத்தை பிய்த்து போட்டுள்ளது இர்மா புயல். சாலைகள் ஆறுகளாக காட்சியளிப்பதோடு, மரங்கள் வேறோடு பிடுங்கி எரியப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக புயல், மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இர்மா புயல் ஃப்ளோரிடா மாகாணத்தை கடக்கும் செய்தி வெளியான உடனேயே மியாமியில் உள்ள பூங்கா நிர்வாகத்தினர், பூங்காவில் இருந்த விலங்குகளை அருகில் உள்ள தற்பாலிக குடியிருப்புகளில் பாதுகாப்பாக இடம்பெயர்வு செய்தனர். புயல் எச்சரிக்கையால் செய்வதறியாது திகைத்த நிலையில் மக்கள் வேகவேகமாக இடம்பெயர்வு செய்யப்பட்ட நேரத்தில் ஃப்ளோரிடாவில் இருந்து மத்திய ஃப்ளோரிடாவிற்கு 5 டால்பின்கள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன.

விலங்குகளுக்கு அடைக்கலம்

மியாமிக்கு அருகில் உள்ள கல்ஃப்ஸ்ட்ரீம் பூங்காவில் தாழ்வான பகுதிகிளில் இருந்த சிறுத்தை, நாய்கள் உள்ளிட்டவை பாதுகாப்பான இடத்தில் கூண்டு அமைத்து இடம்பெயர்வு செய்யப்பட்டன. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பாதுகாப்பு தேவை என்பதை உணர்ந்து பூங்கா பணியாளர் உடனடியாக இடம்பயெர்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அன்னநடை போடும் ஃப்ளெமிங்கோ

இதே போன்று ப்ளெமிங்கோக்களும் பஸ்ச் கார்டன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வெளியே பேய்மழையும், சுன்றடிக்கும் சுறாவளியும் பிச்சு உதர ஃப்ளெமிங்கோக்கள் அன்ன நடை போட்டு செல்லும் வீடியோ டுவிட்டரில் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது.

தற்காலிக ஷெல்ட்டர்கள்

இதே போன்று மியாமி பூங்காவில் இருந்து அமெரிக்க வெள்ளை பெலிகான் மற்றும் செந்நிற பெலிகான்கள் தற்காலிக ஷெல்டரில் அடைக்கப்பட்டன. ஃப்ளோரிடாவில் இருந்து புயல், மழை காரணமாக இடம்பெயர்ந்த பலரும் தங்களது செல்லப் பிராணிகளான பூனை, நாய் உள்ளிட்டவற்றை தங்களோடு அடைக்கலம் வந்த இடத்திற்கு எடுத்து வந்திருந்தனர்.

 வளர்ப்புப் பிராணிகளை கைவிடாத மக்கள்

வளர்ப்புப் பிராணிகளை கைவிடாத மக்கள்

இதே போன்ற ஆதரவற்று திரிந்த விலங்குகளுக்கு நட்சத்திர ஓட்டலில் வசிக்கும் நபர்கள் தங்கள் அரவணைப்பில் வைத்துக் கொண்டனர். செல்லப்பிராணிகளுக்கும் தங்களுக்குமான பிணைப்பை காட்டும் விதமாக பலர் கடும்மழையும் தங்களது நாய், பூனை உள்ளிட்டவற்றிற்கு பாதுகாப்பு அளித்தனர்.

அடைக்கலம் தேடிய ஜோடிக் கிளிகள்

இரண்டு பச்சைக் கிளிகள் மழையில் சிக்கி கென்ட்டலில் உள்ள 22வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல் பகுதியில் அடைக்கலம் தேடின. மழையில் நனைந்தபடி ஆதரவுக்காக ஏங்கும் இந்த ஜோடிக்கிளிகளின் புகைப்படமும் டுவிட்டரில் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As bands of Hurricane Irma started making their arrival at Zoo Miami animals on that park where safely shifted to temporary shelters, whereas many pet lovers bring their pet while evacuvating.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற