For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஃப்கானிஸ்தான் அதிபர்

By BBC News தமிழ்
|
ஆஃப்கன் அதிபர்
Getty Images
ஆஃப்கன் அதிபர்

ஆஃப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக, ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மன்னிப்பு கேட்டுள்ளார்.

அரசு அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் தொடர்புள்ளது என்று கூறப்பட்ட கருத்திற்கு பதிலளித்த அதிபர், இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அல்லது பெண்களின் தலையில் அணியும் துணியைதான் அணிய வேண்டும் என கூறினார்.

இந்த கருத்து பாலின ரீதியிலானது என சர்ச்சையை கிளப்பியது.

இந்த கருத்தால் வருத்தமடைந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர், தனது வார்த்தைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் பெண் உரிமைக்காக குரல்கொடுப்பதோடு, நம் நாட்டில் பெண்களுக்கான இடத்தை பாதுகாக்கவும், உறுதியாக்கவும் பணியாற்றி வருபவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர், சாடர் என்று பயன்படுத்திய வார்த்தைக்கு, ஆங்கிலத்தில் தலையில் அணியும் துணி என பொருள்படுவது தான் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சாதாரணமாக கூறப்பட்டவையே தவிர, நாட்டின் மிகமுக்கிய இடத்தில் உள்ள மகளிரை புண்படுத்துவதற்கு கூறயவையல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/FawziaKoofi77/status/936994910628085760

பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஃபிரி உமன் ரைட்டர்ஸ் என்ற குழு, அதிபரின் வார்த்தைகளுக்கு பதிலளித்துள்ளது.

பெண்களை அவமானமாக அதிபரே நினைக்கும்போது, ஆஃப்கானிஸ்தான் பெண்களின் நம்பிக்கையாக யாரை பார்க்கமுடியும் என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பெண் பாராளுமன்ற உறுப்பினரான ஃபௌசியா கூஃபி, தலையில் துணையை அணிவதில் பெருமைகொள்வதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
The Afghan president has apologised to women for remarks he made about the traditional headscarf. On Saturday, Ashraf Ghani responded to claims that some government officials have links to so-called Islamic State. He said people should provide evidence or wear a woman's headscarf.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X