For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரமாண்ட திட்டம் போடும் ஸ்பேஸ் எக்ஸ்.. எதிர்த்து நிற்கும் நாசா.. உருவாகிறது புதிய சண்டை!

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், நாசா நிறுவனத்திற்கும் இடையில் தற்போது பிரச்சனை உருவாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    திட்டம் போடும் ஸ்பேஸ் எக்ஸ்...எதிர்த்து நிற்கும் நாசா...வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், நாசா நிறுவனத்திற்கும் இடையில் தற்போது பிரச்சனை உருவாகி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிக மோசமான சக்தி கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி பிரச்சனையை உருவாக்க நினைப்பதாக நாசா கூறியுள்ளது.

    உலகின் முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் உலகின் பெரிய பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லா காரை அனுப்பி சாதனை படைத்தனர்.

    நாசா நிறுவனமே இவரிடம் பலமுறை உதவி கேட்டு இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது உலகில் உள்ள தனியார் மற்றும் அரசு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான் முதலிடத்தில் இருக்கிறது.

    நண்பர்கள் ஆனார்கள்

    நண்பர்கள் ஆனார்கள்

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த தொடர் வெற்றிகள் காரணமாக நாசா அவர்களுடன் ஒன்றாக சேர்ந்தது. இப்போது நாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி நாசாவின் விண்வெளி திட்டங்களுக்கு தேவையான ராக்கெட்டுகளை இனி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான் விண்ணில் அனுப்பும். இனி நாசா சுயமாக ராக்கெட் தயாரிப்பதை குறைத்துக் கொண்டு, மற்ற விண்வெளி திட்டங்களில் கவனம் செலுத்தும்.

    என்னவெல்லாம் செய்ய இருக்கிறார்கள்

    என்னவெல்லாம் செய்ய இருக்கிறார்கள்

    இந்த முறை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அவர்கள் எப்போதும் அனுப்பும் பல்கான் ஹெவி ராக்கெட்டில் எரிபொருளை இனி திரவ நிலையில் வைக்க போவதில்லை என்றுள்ளனர். மாறாக திரவ எரிபொருளை மிக அதிக அளவில் குளிர்ச்சிக்கு உள்ளாக்கி அதை திட நிலைக்கு மாற்றி பின் பயன்படுத்த உள்ளனர், இதன் மூலம் ஒரு எரிபொருள் டேங்கில் மிக அதிக அளவில் எரிபொருள் நிரப்பலாம். இது பறக்கும் நேரத்தை அதிகரிக்கும்.

    வெடிக்கும்

    வெடிக்கும்

    ஆனால் இப்படி செய்தால் அது ராக்கெட்டிற்கு பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று நாசா கூறியுள்ளது. ஒரு மிக சிறிய தவறு நடந்தால் கூட ராக்கெட் வெடித்துவிடும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நாசா சொல்வதை ஸ்பேஸ் எக்ஸ் கேட்கும் முடிவில் இல்லை. இனி நாசா அனுப்பும் செயற்கைகோள்களை, மற்ற விண்வெளி திட்டங்கள் எல்லாவற்றிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த மாதிரியான ராக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்த உள்ளது.

    பிரச்சனை ஆகும்

    பிரச்சனை ஆகும்

    இந்த விஷயம் தற்போது நாசாவிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் பிரச்சனையை உருவாக்கி உள்ளது. உலகின் இரண்டு பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இப்போது சண்டை போட்டுக் கொள்ள தயாராகி இருப்பது அச்சத்தை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் இதனால் எந்த மாற்றமும் செய்யப்பட போவதில்லை. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் இனிமேல் சில முக்கியமான தொழில்நுட்ப உதவிகளை நாசாவிற்கு செய்யாது என்று கூறப்படுகிறது.

    English summary
    Astro Storm: Clash between Space X and NASA creates new tension. NASA accuses Space X for their new project in Felcon heavy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X