ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்... அழகான போஸ் கொடுக்கும் தாய் - இணையத்தில் வைரலாகும் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேன்பெர்ரா : ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களல் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் பகுதியில் வாழ்ந்து வரும் கிம், வான் டூசி தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரே பிரசவத்தில் ஐந்து அழகான குழந்தைகள் பிறந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதமே இந்த குழந்தைகள் பிறந்திருந்தாலும் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தற்போதுதான் இந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்துள்ளன. இந்த குழந்தைகளின் அழகழகான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

4 இளவரசிகள்

4 இளவரசிகள்

ஐந்து குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும் நான்கு பெண் குழந்தைகளும் உள்ளன. ஆண் குழந்தைக்கு கேத் என்ற பெயரும் நான்கு பெண் குழந்தைகளுக்கும் அலி, பென்னலோக், டிஃபன்னி, பீட்ரிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளன.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான போது 5 குழந்தைகளுக்கு பெற்றோரானதை கேட்டதும் ஆச்சரியமடைந்தனர்.

சந்தோஷ நேரங்கள்

சந்தோஷ நேரங்கள்

ஒரு தாய் வயிற்றில் 10 பிஞ்சுக் கைகள், 10 கால்களுடன் அவை வளர்ந்த விதம் நினைத்துப் பார்க்கவே மயிர்க்கூச்செரிய வைக்கிறது. தாயையும் சேர்த்து 6 இதயங்கள் துடித்த அந்த கனம் முதலே இந்த தம்பதி தங்களின் மருத்துவ பரிசோதனைகள், குழந்தைகளின் அசைவுகள் என அனைத்தையும் இணையதளம் வாயிலாக உலகிற்கு காட்டி வருகின்றன.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

அந்த வரிசையில் கிம் தன்னுடைய 5 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மட்டுமின்றி கிம்மின் பாட்டி ஏழு குழந்தைகளையும் அவர்கள் அழைத்து சென்று வர வசதியாக ஒரு வேனை வாங்குவதற்காக Go Fund Page என்னும் பக்கத்தை தொடங்கி அதன் மூலம் நிதியை திரட்டி வருகிறார்.

Image Courtesy:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The five babies, born in January, have recently been introduced to the world through a gorgeous photoshoot which is going viral
Please Wait while comments are loading...