'முகம் முழுக்க பயங்கர ரத்தம்..' ஆஸ்திரேலிய இளைஞரின் மண்டை உடைத்த தாலிபான்கள்.. பரபர வீடியோ வைரல்
காபூல்: ஆஸ்திரேலிய நாட்டின் இளைஞர் ஒருவரைத் தாலிபான்கள் கொடூரமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் எடுத்துள்ள வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்கனை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். முதலில் நாட்டின் எல்லைகளையும் கிராமப்புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள் கடைசியாகத் தலைநகர் காபூலை ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர்.
ஆப்கன் ராணுவம் பல்வேறு இடங்களிலும் தாலிபான்களுக்கு எதிராக போராடாமல் சரணடைந்துவிட்டனர். இதனால் மிகக் குறுகிய நாட்களில் பெரியளவில் போர் இல்லாமல் தாலிபான்களால் ஒட்டுமொத்த ஆப்கானைக் கைப்பற்ற முடிந்தது.
|
தாலிபான்கள்
கடந்த 1996 - 2001ஆம் ஆண்டில் இருந்த தாலிபான்கள் ஆட்சி போல இது இருக்காது என்றும் இந்த முறை மனித உரிமைகள் உறுதி செய்யப்படும் என்று தாலிபான்கள் உறுதியளித்தனர். சர்வதேச நாடுகளுடன், (குறிப்பாகச் சீனா, பாகிஸ்தான்) இணைந்து ஆப்கனை மீண்டும் கட்டமைக்கவுள்ளதாகவும் பெண்களுக்கான உரிமையும் இந்த முறை உறுதி செய்யப்படும் எனத் தாலிபான்கள் கூறியுள்ளனர். ஆனால், ஆப்கன் மக்களுக்குத் தாலிபான்கள் கூறியதில் நம்பிக்கை இல்லை போலவே தெரிகிறது.
|
காபூல் விமான நிலையம்
ஆப்கன் நாட்டில் இருந்து வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஆப்கனில் இருந்து வெளிநாட்டினரை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் காபூல் விமான நிலையத்தைச் சுற்றிலும் சோதனை சாவடிகளை ஏற்படுத்தியுள்ள தாலிபான்கள் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர்.

வைரல் வீடியோ
காபூல் விமான நிலையத்தைச் சுற்றிலும் அதிகளவிலான மக்கள் கூடி வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்த தாலிபான்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்களைப் பிடித்துத் தள்ளுவது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடுவது எனத் தாலிபான்களின் செயல்பாடுகள் குழப்பத்தை அதிகப்படுத்துவது போலவே உள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்குச் செல்லும் ஆஸ்திரேலியா இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரது, மண்டையைத் தாலிபான்கள் உடைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

முகம் முழுக்க ரத்தம்
முகத்தில் முழுவதும் ரத்தம் வழிய வழிய இருக்கும் அந்த இளைஞர், "நான் ஆஸ்திரேலியா குடிமகன். இவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்" எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது. தன்னை தாக்கிய தாலிபான்களையும் அவர் இந்த வீடியோவில் காட்டுகிறார். மேலும், "நான் காபூல் விமான நிலையத்திற்குச் செல்ல முயன்றேன். அதற்கு என்னை என்ன செய்துள்ளார்கள் எனப் பாருங்கள்" என்றும் கூறுகிறார். மேலும் அப்போது என்ன நடந்தது என விளக்க முற்படுகிறார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து யாரோ அவரை இழுக்கிறார். அப்படியே பாதியில் அந்த வீடியோ முடிகிறது.
Recommended Video

ஆஸ்திரேலியா இளைஞர்
இந்த வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. மனித உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்போம் எனத் தாலிபான்கள் ஒருபுறம் கூறி வந்தாலும், களத்தில் நடப்பது நேர்மாறாகவே உள்ளது. விமான நிலையம் செல்ல முயன்ற, அதுவும் அந்நிய நாட்டு இளைஞர் ஒருவரை மிக மோசமாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து, பலரும் தாலிபான்களுக்குக் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications