மரணித்த பின்பும் சிக்கிம் எல்லையை அரைநூற்றாண்டாக காவல்காக்கும் மேஜர் பாபா ஹர்பஜன் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காங்டாங்: போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தையும் நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார் 50 ஆண்டுகளுக்கு முன் மரணித்துப் போன ராணுவ வீரர் பாபா ஹர்பஜன்சிங்.

சிக்கிம் தலைநகர் காங்டாங் செல்கிற யாரும் பாபா ஹர்பஜன்சிங் மந்திருக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். சிக்கிம் தலைநகர் காங்டாங் செல்கிற யாரும் பாபா ஹர்பஜன்சிங் மந்திருக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். ராணுவ வீரரான ஹர்பஜன்சிங் 1968-ம் ஆண்டு நாதுலா எல்லை பாதுகாப்பில் இருந்த போது ஆற்றில் தவறி விழுந்து மரணித்தார். அவர் மரணித்த பின்னர் ராணுவ வீரர்களின் கனவில் வந்து தமக்கு சமாதி கட்ட கேட்டுக் கொண்டார். இதையடுத்து உருவானதுதான் இந்த பாபா ஹர்பஜன்சிங் மந்திர்.

பாபா ஹர்பஜன்சிங் கோவில்

பாபா ஹர்பஜன்சிங் கோவில்

அந்த ஆலயத்தில் 3 அறைகள் இருக்கும். ஒன்றில் ஹர்பஜன்சிங் உருவப்படம் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். மற்றொரு அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் இருக்கின்றன.

உயிரோடு பணிபுரிவதாக நம்பிக்கை

உயிரோடு பணிபுரிவதாக நம்பிக்கை

இன்னொன்றில் மேஜையும் நாற்காலியும் போடப்பட்டிருக்கும். அந்த அறைக்கு வெளியே ராணுவ வீரர் பாதுகாப்புக்கு நிற்பார். அதாவது பாபா இன்னமும் உயிரோடு பணிபுரிந்து வருவதாகத்தான் ராணுவம் கருதுகிறது.

சீன ராணுவத்தினரும் அச்சம்

சீன ராணுவத்தினரும் அச்சம்

அதேபோல் சீனாவுடனான எல்லை பேச்சுவார்த்தைகளிலும் பாப ஹர்பஜன்சிங்குக்கு ஒரு இருக்கை போடப்பட்டிருக்கும். பாபா ஹர்பஜன்சிங் இரவு நேரத்தில் குதிரையில் எல்லையை காவல் காப்பதாக சீன ராணுவத்தினரும் கூட அஞ்சுகின்றனர்.

ஆண்டுதோறும் ரயில் டிக்கெட்

ஆண்டுதோறும் ரயில் டிக்கெட்

அவர் இறந்த பின்னர் மேஜர் வரை உரிய பதவி உயர்வுகள் முறையாக வழங்கியிருக்கிறது ராணுவம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14-ந் தேதியன்று பாபா ஹர்பஜன்சிங் பெயரில் அவரது பிறந்த மாநிலமான பஞ்சாப்பின் கபுர்தலாவுக்கு டிக்கெட் எடுக்கப்படும். ரயிலில் அவரது உடைமைகள் சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 2 மாதங்கள் கழித்து மீண்டும் சிக்கிம் கொண்டுவரப்படும்.

இன்னமும் நம்பிக்கை

இன்னமும் நம்பிக்கை

இந்த உடைமைகள் கபுர்தலா போகும்போது அவரது சொந்த கிராமம் திருவிழாவைப் போல நடத்துவர். இப்போது சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் உருவாகியிருக்கிறது. நாதுலா எல்லையில் இருந்து சிறிது தொலைவில்தான் சர்ச்சைக்குரிய பூட்டானின் டோக்லாம் பீடபூமி இருக்கிறது. பாபா ஹர்பஜன்சிங் நாட்டின் எல்லையை எப்போதும்போல காப்பார் என்பது சிக்கிம் மக்களின் நம்பிக்கை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Major Baba Harbhajan Singh was an Indian Army soldier who died near the Nathula Pass, Sikkim still on duty.
Please Wait while comments are loading...