வளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: வளைகுடாவில் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராசல் கைமா, புஜைரா, உம்முல் குவைன் உள்ளிட்ட அமீரகப் பகுதிகளிலும், வளைகுடாவின் பிற பகுதிகளிலும் தியாகத் திருநாளான பக்ரீத் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான துபாய் தேரா ஈத்கா மைதானத்தில் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்வை தெரிவித்துக் கொண்டனர். தொழுகைக்குப் பிறகு குர்பானி கொடுக்கும் சம்பிரதாயமும் சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications