சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியர் அர்மர் : அமெரிக்கா அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்த்த கர்நாடகாவை சேர்ந்த முகமது ஷபி அர்மாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

கர்நாடக மாநிலம் பக்தல் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் முகமது ஷபி மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஷபி அர்மர், தனது சகோதரருடன் பாகிஸ்தான் தப்பி சென்றார்.

தொழில்நுட்பம் படித்து அவர், பேஸ்புக் மூலம், இந்தியா, வங்கதேசம், இலங்கையில் ஐ.எஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

என் ஐ ஏ விசாரணை

என் ஐ ஏ விசாரணை

இது குறித்து கடந்த 2013ம் ஆண்டு நேபாளத்தில் யாசின் பட்கலை கைது செய்து, விசாரணை நடத்திய போது, முகமது ஷபியின் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.

தீவிரவாதிகள் பட்டியல்

தீவிரவாதிகள் பட்டியல்

இவர் மீதான இன்டர்போல் போலீசாரின் ரெட் கார்னர் நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆள் சேர்க்கும் கும்பலின் தலைவன்

ஆள் சேர்க்கும் கும்பலின் தலைவன்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் கும்பலின் தலைவராக முகமது ஷபி அர்மர் செயல்பட்டதோடு இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஐ.எஸ்., ஆதரவாளர்களை தூண்டினார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பயங்கரவாத பட்டியலில் முதல்வர்

பயங்கரவாத பட்டியலில் முதல்வர்

சோட்டா மௌலா, அன்ஞன் பாய், யூசுப் அல் ஹிந்தி என்றெல்லாம் அழைக்கப்பட்ட அர்மர் தான் சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவை சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The US state department sponsored sanctions against Mohammed Shafi Armar, an alleged chief recruiter for ISIS
Please Wait while comments are loading...