வங்கதேசத்தில் புதிய ஆட்சி அமைந்ததுமே இந்தியாவுக்கு அதிர்ச்சி! பிரபல விமான நிறுவனத்திற்கு திடீர் தடை
டெல்லி: வங்கதேசத்தில் இப்போது தான் தேர்தல் நடந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதனால் இந்தியா வங்கதேசம் இடையேயான உறவு மெல்லச் சீரடைய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திடீரென இந்தியா விமான நிறுவனத்திற்கு வங்கதேசம் தனது வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வங்கதேசத்தில் ஹசீனா வீழ்ச்சிக்குப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுதான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்தியா வங்கதேசம் இடையேயான உறவுகள் மிக மோசமாகச் சென்றது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டிய யூனுஸ் அரசு, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது.

திடீர் தடை
இந்தச் சூழலில் தான் வங்கதேசத்திற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்த தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராகச் சமீபத்தில் தான் பதவியேற்றர். அவரது வருகைக்குப் பிறகு, இந்தியா வங்கதேசம் இடையேயான உறவுகள் சீராகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது.
வங்கதேசத்தின் ஏர் ஸ்பேஸ்ஸை பயன்படுத்த ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வங்கதேசத்தின் மீது இனிமேல் ஸ்பைஸ்ஜெட் விமானங்களால் பறக்க முடியாது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக விளக்கங்களும் வந்துள்ளது. நிலுவைத் தொகை பாக்கி காரணமாகவே ஸ்பைஸ்ஜெட் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் மற்ற இந்திய விமானங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
நிலுவைத் தொகைகளைச் செலுத்தாத காரணத்தாலேயே, ஸ்பைஸ்ஜெட்டை அதன் வான்வெளியைப் பயன்படுத்த வங்கதேசம் தடை விதித்துள்ளது. நிலுவைத் தொகை தொடர்பாக வங்கதேச அதிகாரிகளின் பல முறை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துவிட்டனர். இருப்பினும், அதன் பிறகும் ஸ்பைஸ்ஜெட் நிலுவைகளைச் செலுத்தத் தவறியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்பைஸ்ஜெட் விளக்கம்
இச்சிக்கலை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிலுவைகளைச் செலுத்தி ஆபரேஷன்களை விரைவில் மீட்டெடுக்க முயல்வதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து வழிசெலுத்தல் கட்டணங்கள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இவை வழக்கமான தொழில் சிக்கல்கள் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.
இதனால் விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என ஸ்பைஸ்ஜெட் தெரிவித்தபோதிலும், நிலுவைத் தொகை செலுத்தாததால் வான்வழிப் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன. வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் எதையும் சொல்லவில்லை. இருப்பினும், ஃபிளைட்ரடார்24 டிராபிக் தளத்தைப் பார்த்தால் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பங்களாதேஷ் வான்வெளியைத் தவிர்த்து, அதை சுற்றி மாற்றுப் பாதைகளில் செல்வது தெளிவாகவே தெரிகிறது.
கடும் சரிவு
இந்த செய்தி பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்த செய்தி வெளியான உடனேயே மும்பை பங்குச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் பிற்பகல் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் சரிந்து ரூ. 16.81ஆக இருந்தது. டிசம்பர் 2025 காலாண்டில், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் ஒருமுறை செலவுகள் எல்லாம் சேர்த்து ரூ. 269.27 கோடி இழப்பை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
தூத்துக்குடி மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... இரவில் வந்ததுமே அப்படியொரு மகிழ்ச்சி -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி











Click it and Unblock the Notifications