For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்களாதேஷில் ஃபேஸ்புக்-குக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் ! வாட்ஸ்அப் தடை நீடிப்பு !!

By Karthikeyan
Google Oneindia Tamil News

டாக்கா: பங்களாதேஷ் நாட்டில் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தரானா ஹலீம் தெரிவித்துள்ளார். இருப்பினும் பாதுகாப்பு கருதி வாட்ஸ்அப் தடை நீடிக்கிறது.

கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற, பங்களாதேஷில் பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

Bangladesh removal on facebook

இவர்களது தூக்கு தண்டனை காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக அங்கு பேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தடையை இன்று நீக்கியிருப்பதாக வங்காளதேச தொலைதொடர்புத்துறை அமைச்சர் தரானா ஹலீம் தெரிவித்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவில்லை.

ஏற்கனவே பிரதமரும் ராணுவ அதிகாரிகளும் பேசும் காட்சி ஒன்றை வெளியிட்டதற்காக 2012-13-ம் ஆண்டுகளில் 260 நாட்கள் வரை யூடியூப் வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பங்களாதேஷில் இண்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர்.

English summary
Bangladesh on Thursday lifted the ban on popular social network Facebook
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X